Saturday, November 28, 2020

 


#சேலம்_கிச்சிப்பாளையங்கள் #சாத்தான்குளங்கள்_என_விவாதங்கள் #மட்டும்_வந்து_போகின்றன....
#ஆனால_தீர்வுகள்?
————————————————





எல்லோரும் கருத்துக்களைப் பகிர உரிமைகள் உண்டு. அதை மறுப்பதற்கில்லை. கடந்த காலத்தில் 1982காலக்கட்டத்தில் மனித உரிமை ஆர்வலரும், ஓய்வு பெற்ற பம்பாய் உயர்நீதி மன்ற நீதிபதி வி.எம் தார்குன்டே மதுரையில் மனித உரிமை
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது காவல் துறையால் தாக்கப்பட்டார். அது குறித்தான கண்டன அறிக்கையில் கையெழுத்திட மறுத்தவர், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அதே காலக்கட்டத்தில் சேலம் கிச்சிப்பாளையத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு பெண்மணி காவல் மரணம் அடைந்தார். இதை குறித்து நானும் சக வழக்கறிஞர் ரங்காவும் ( இவர் ஒரு மார்வாடி) சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் .விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் காவல் துறைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.சட்டப் பேரவையிலும்
எழுப்பப் பட்டது. அப்போது பேரவை தலைவர் க. இராசா ராம் ஆவார் .இப்படி 75 க்கு மேலான காவல் மரணங்களை கடந்த 40 ஆண்டுகளில் சொல்லாம். காவல் மரணங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி நபர் சட்ட மசோதாவாக1982 தாக்கல் செய்ய பழ. நெடுமாறனுக்கு நான் தயார் செய்து கொடுத்தேன். அப்போதெல்லாம் இவர்களிடம் கேட்டும் கருத்து சொல்லவில்லை. தங்கள் தொழிலுண்டு, பாடுண்டு அப்போது இருந்தார்கள். இப்போது ஓய்வு பெற்ற பின் கருத்து கந்தசாமியாக மாறுவது விநோதமாக இருந்தது. எல்லாம் தன் இருத்தல் நீமித்தம், ஊடக வெளிச்சம். அவ்வளவுதான் .அவர்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள். காலத்திற்கேற்ப நிலைப்பாடுகள். எல்லா தளங்களிலும் இது தான் பொருந்துகின்றது.
இதயசுத்தியோடு தொடர்ந்து கருத்துகளைச் சொல்லுபவர்கள் மறுக்கப்பட்டு இவர்களை கொண்டாடப்படுகிறார்கள். வாழ்க நமது கருத்துலகம்,ஜனநாயகம்.

விடுதலை போரட்ட வீரர்களை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் போலீஸ் சித்ரவதைகளை நடைமுறை படுத்தினார்கள்.இன்றைய காவல் துறை அடக்குமுறை அப்படியே நடக்கிறது,
ஆட்சிகள் மாறுகின்றன
காட்சிகள் மாற வில்லை..
System அமைப்பு ரீதியாக மாற்றனும்,
அதை மாற்றுகிற நிலை வரனும்

சேலம் கிச்சிப்பாளையங்கள் சாத்தான்குளங்கள் என விவதங்கள்
மட்டும் வந்து போகின்றன....
ஆனால தீர்வுகள்?

#JUSTICE_VM_TARKUNDE (1909-2004)

Justice_Tarkunde, also referred as the ‘Father of the Civil Liberties Movement’ in India was a prominent civil rights activist and humanist leader. He was the honorable Judge of Bombay High Court from 1948 to 1969. He was elected the President of Peoples Union of Civil Liberties (PUCL) after emergency in 1977. He was the first donor to the VOICE Trust registered in 1986 and supported development of Consumer VOICE as an institution.

#காவல்_மரணங்கள்
#custodial_death
#கருத்துலகம்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-06-2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...