Saturday, November 28, 2020

 

#இதுதான்_தொடரும்_அரசியல்.....
#வரலாறு.....
#ஆதிக்க_ஜனநாயகம்
#தூத்துக்குடியில்,1952ல்ஓர் நிகழ்வு.
————————————————-




நாடு விடுதலை பெற்ற புதிதில் சென்னை மாகன உணவமைச்சராக இருந்தவர் #தூத்துக்குடி_ரோச்_விக்டோரியா; அவர் தூத்துக்குடிக்கு மூன்றரைக் கல் தொலைவிலிருக்கும் மீளவிட்டான் அருகே காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைப்பதற்கான பாறைப் படிவங்கள் இருப்பதை உணர்ந்தார்.

தானே, அந்தத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் முதல் கட்டமாக மேல்மட்ட மகானுபாவர்கள் தெரிவித்ததன் பேரில் தமது பதவியைத் துறந்தார். அது 1951, 1952-ல் ஜனவரி மறுவாரமே தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கவரனராக இருந்த மைசூர் அரசர் ஜெயசாமராஜ உரையார் அந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவித்தார். தொழிலாளர்களுக்கான வீட்டு வசதிகள் உருவாக்கப்பட்டன. சென்னை கிராம்டன் நிறுவனம் மின் இணைப்பு ஏற்பாடுகளைக் கவனித்தது. ஸ்விட்சர்லாந்திலிருந்து இயந்திரங்கள் தருவிக்கப்பட்டன.

1954 செப்டம்பரில் ‘ரோச் விக்டோரியாவின் நலன் கருதி’ தொழிற்சாலை அனுமதி ரத்தானது. அதே ஆண்டு நவம்பரில் ஒரு வடநாட்டுப் பணமுதலைக்கு அனுமதி வழங்க்ப்பட்டது, அது தான் இன்றைக்குத் தூத்துக்குடி அருகே நிமிர்ந்து நிற்கிற ஆறுமுகநேரி தாரங்கதாரா தொழிற்சாலை.

#தாரங்கதாராவின் கீழே படர்ந்த சுண்ணப் படிவங்கள் மட்டுமில்லை; மறைந்த‘ரோசி விக்டோரியா’ என்கிற மனிதர் மக்கிப்போன எலும்புக்கூடும் இருக்கிறது.இதுதான் தொடரும் அரசியல்.....
வரலாறு.....
ஆதிக்க ஜனநாயகம்
#தகுதியே_தடை

#Chevalier_John_Ladislaus_Pitchaiya #Roche_Victoria K. S. G (b. 26 September 1894 - d. 15 October 1962)was an Indian politician from Tuticorin belonging to the Indian National Congress. He was from a wealthy and eminent Paravar family and was also a businessman with ownership in several commercial ventures. During 1926-46 he was the chairman of the Tuticorin Municipality. He was a member of the Madras Presidency Legislative Assembly during 1937-42 and a nominated member of the Madras Legislative Council from 1946. He served as the minister for Food and Fisheries in the P. S. Kumaraswami Raja cabinet during 2 June 1949 – 8 February 1952. He was elected to the Tamil Nadu legislative assembly as an Indian National Congress candidate from Tuticorin constituency in the 1952 election.He was also the governor of the Rotary district 320 (covering Sri Lanka and South India).

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
03.07.2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...