Saturday, November 28, 2020

 


#ஆசாரக்_கோவை
—————————



மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் நீதி நூல். பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் -- ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. ‘பெருவாயின் முள்ளியார்’என்னும் புலவர் இதனை எழுதினார்.

அதில் ஒன்று
எப்படி உணவு உண்ண வேண்டும் என்று மிக விரிவாகச் சொல்கிறது.

#முதல்_பாடல்

#நீராடிக்_கால்_கழுவி_வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து.

பொருள்
நீராடிக் = குளித்து
கால்கழுவி = கால் கழுவி
வாய்பூசி = வாய் கொப்பளித்து
மண்டலஞ்செய்து = உண்ணுகின்ற இலையையோ, தட்டையா சுற்றிலும் நீர் வலம் செய்து
உண்டாரே யுண்டா ரெனப்படுவர் = உண்டவர்களே, உண்டார் என்று சொல்லப் படுபவர்
அல்லாதார் = அப்படி இல்லாமல் உண்பவர்கள்
உண்டார்போல் = உணவு உண்டவர்களைப் போல
வாய்பூசிச் செல்வர் = வாய் கழுவி செல்வார்கள்
அவரதுவெறுத்துக் = அதை வெறுத்து
கொண்டா ரரக்கர் குறித்து. = கொண்டார் அரக்கர் குறித்து (அவர்கள் உண்டதை அரக்கர்கள் குறித்து எடுத்துக் கொள்வார்கள் )

ஏன் இப்படி செய்ய வேண்டும் ?
நீராடி = புரிகிறது. உடலில் உள்ள அழுக்கு போன பின், புத்துணர்வோடு உண்பது ஒரு சுகம்.

கால் கழுவி = ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்னால் நீராட முடியாது. குறைந்த பட்சம் கால் கழுவ வேண்டும். கண்ட இடத்திலும் நடப்பதால், காலில் அசுத்தங்கள் ஒட்டி இருக்கலாம். அவை உணவோடு சேர்ந்து உள்ளே போகாமல் இருக்க கால் கழுவி.

வாய் பூசி = உண்பதற்கு முன்னால் வேறு எதையாவது குடித்திருப்போம் (காப்பி, டீ ). அது நாவில் ஒட்டி இருக்கும். உணவின் சுவையை அறிய விடாது. வாய் கழவி விட்டால் , உணவின் சுவை நன்றாகத் தெரியும்.

நீர் வலம் செய்து = நீர் சுற்றிலும் இருந்தால் எறும்பு போன்றவை உணவை நாடி வராது. அதை விட முக்கியமானது, பசி அவசரத்தில் பக்கத்தில் நீர் எடுத்து வைக்காமல் உண்ண ஆரம்பித்து விட்டால், திடீரென்று விக்கல் வந்தால் நீர் இல்லாமல் சிரமப் படுவோம். இப்படி செய்யும்போது நமக்கு நீர் எடுத்துவைத்துக்கொண்டு உணவருந்தும் பழக்கமும் வரும்

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...