Friday, April 21, 2023

இவர்களின் திராவிட மாடல் இதுதான்…….(1)

இவர்களின் திராவிட மாடல் இதுதான்…….(1)
—————————————
மின் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தியது, பால் விலை உயர்வு, போக்குவரத்து தனியார் மையம் என்று சொல்லிவிட்டு பின் தனியார் பேருந்து தான் ஆனால் அதை நடத்துபவர்கள் அரசு ஊழியர்கள் என்று சமாளித்தது, கவர்ச்சிகரமான அறிவிப்புகள், மது விலக்கு சொல்லியபடி இல்லை.இப்படி பல விடயங்கள்….

எல்லாவித ஊடகங்களையும் ஆட்சி விளம்பரத்திற்கான பிரச்சார வாகனங்களாக மாற்றி வைத்திருப்பது, கடுமையான நிதி நெருக்கடி இருக்கையில் திட்டங்கள் மேல் திட்டம் என பணத்தை வாரி விடுவது, கூட்டணிக் கட்சிகளை மௌனமாக்கி அடையாளமின்றி வைத்திருப்பது...

நேற்று வரை இவர்களை திட்டி இன்று துதி பாடுவோர்க்கு பட்டம் பதவி சௌகரியங்கள் தருவது...

அந்த வகையில் இப்போது வேலை நேரத்தை பன்னிரண்டு மணி நேரம் ஆக்குவதற்கான மசோதாவை நிறைவேற்றி இருப்பது

இங்கிலாந்தில் துவங்கி உலகம் பரவிய தொழில் புரட்சியின் மிகக் கடுமையான எதிர்மறை விளைவுகளில் ஒன்றான உழைப்பு சுரண்டல், எல்லை மீறிப் போகும் போது காரல் மார்க்ஸ் போன்ற அரும் தலைவர்களின் சித்தாந்தங்கள் எளிய மக்களை முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல்களில் இருந்து மீட்டு நிம்மதியாய் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திய சோகமான பக்கங்கள். என்பதை உலகறியும். 

இது எதுவுமே கருத்தில் கொள்ளாமல் இப்படி ஏதேச்சதிகாரம் போல….

எதற்கெடுத்தாலும் முட்டுக் கொடுத்துக் கொண்டு எல்லா அநியாயங்களையும் நியாயப்படுத்துவதற்காக ஊடகங்களை அதற்கான ஸ்டாலின் சுய பிரச்சார மேடைகளாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இருக்கும் வரையில் இங்கு நேர்மையும் நியாயமும் பலியாகுவது தவிர்க்க முடியாததாக தான் இருக்கும்

****

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய  வழி வகை செய்யும்  தொழிலாளர் சட்டத்தில் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதை  எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோர்  வெளிநடப்பு செய்தனர்.   மதிமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர் என்ற  செய்தி  வெளிவந்துள்ளது. 

அங்கே, மதிமுக என சட்டப் பேரவையில் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லையே.. சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஆறு தொகுதிகளில் திமுக( ம.தி.மு.க) போட்டியிட்டது. பிறகு அவர்கள் திமுக தான்னே…

#ksrpost
21-4-2023.

தமிழ்நாட்டு அரசியலில் எல்லாம் நாடகங்களே...

ஆடியோ என்னுடையது அல்ல அதாவது என்னுடைய குரல் அல்ல என்று  அந்த  நிதி மந்திரி மறுத்துள்ளரா? மறுக்க சொல்லுங்க
என அவரிடம் யாரும் கேட்க்கவில்லையா?

தமிழ்நாட்டில் முக்கியமான (குழப்பமான) செய்தியை எந்த எதிர்கட்சிகளும் கையிலெடுக்கவில்லை,ஊடகங்கள் ஊமையாகி விட்டன கேலிக்கூத்தான  தமிழக அரசியல்  சூழல்.

குறைந்தபட்சம் இந்த செய்தி உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும் என்று கூட யாரும்,  ஊடகங்கள், செய்தி தாட்கள் குரலெழுப்ப வில்லை.

ஊடகங்கள் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகிறது. அதன் நேர்மை உறுதிப்பாடு ஆகியவை மிக மிக முக்கியமானவை. 

ஏதாவது ஒரு கட்சியின் சார்பிலோ அல்லது நபர்களின் சார்பிலோ ஊடகங்கள் செயல்படுவது மிக வேதனைக்குரியது.




தமிழ்நாட்டு அரசியலில்  எல்லாம் நாடகங்களே...

#ksrpost
21-4-2023.

#வைக்கம் போராட்டம்

#வைக்கம் போராட்டம்.                          

#KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,
https://youtu.be/PejCqOBWWy8
#ksrpost
21-4-2023.

Thursday, April 20, 2023

கடந்த 1996 பொதுத்தேர்தலில் ரஜினிகாந்த் வாய்ஸ், சோ,தமாகவால் மதிமுகவுக்கு, வைகோவுக்கு பெரும் பாதிப்பு.

கடந்த 1996 பொதுத்தேர்தலில் ரஜினிகாந்த் வாய்ஸ்,
சோ,தமாகவால் 
மதிமுகவுக்கு, வைகோவுக்கு பெரும் பாதிப்பு

 #KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,
#ksrpost
20-4-2023. 

https://www.youtube.com/watch?v=aY0c_yifvAQ


#தமிழகத்தில் நிறைவு பெறாத மின்திட்டங்கள்

#தமிழகத்தில்_நிறைவு_பெறாத_மின்திட்டங்கள்
————————————————————
ஐந்து அனல் மற்றும் இரண்டு நீர் மின் நிலையங்களை தமிழக மின்வாரியம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமைத்து வருகிறது. என்றாலும் இதுவரை  ஒன்று கூட செயல்பாட்டுக்கு வரவில்லை. அவற்றுக்காகச் செலவிடப்பட்ட தொகை 48 ஆயிரத்து 500 கோடி.
எண்ணூர் விரிவாக்க அனல் மின் நிலையம் 
 சென்னை எண்ணூரில் 2014 ஆம் ஆண்டு  660 மெகா வாட் திறனில், எண்ணுார் விரிவாக்க அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 3,921 கோடி ரூபாய் செலவில். 'லேன்கோ' நிறுவனம் வாயிலாக தொடங்கப்பட்டது. அங்கு 2018 இல் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டாலும்,  நிதி நெருக்கடியால்,  17 சதவீத பணிகளே நிறைவடைந்தன.  2022- இல் பி.ஜி.ஆர்., நிறுவனம் வாயிலாக பணிகளை தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கான  செலவு 4,440 கோடி ரூபாய். 2025 ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். இன்னும் 1 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை.  
திருவள்ளூரில் 'வட சென்னை - 3' 
திருவள்ளூரில் 'வட சென்னை - 3'  என்ற பெயரில் 800 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. அங்கு 2019 - 20 இல் மின் உற்பத்தி தொடங்கவும்  திட்டமிடப்பட்டது. அதற்கான செலவு 8,736 கோடி ரூபாய். ஆனால் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை
திருவள்ளூர், வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அனல் மின்நிலையம்
2014 ஆம் ஆண்டு திருவள்ளூர், வாயலூரில்  எண்ணூர்  சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில், 1200 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி,  ரூ.13 ஆயிரத்து 76 கோடி செலவில்   தொடங்கப்பட்டது. 'பெல்' நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அங்கு 2020  ஆம் ஆண்டு ஆகஸ்டில் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது; இதுவரை பணிகள் முடியவில்லை
உப்பூரில் அனல் மின் நிலையம் 
ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 1600 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 2016 ஆம் ஆண்டு  தொடங்கியது. செலவு 12 ஆயிரத்து 778 கோடி ரூபாய். அங்கு 2021 இல் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததால், அந்த திட்டத்தை தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பின், பசுமை தீர்ப்பாய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதையடுத்து, உப்பூரில் பணிகளை தொடர முடிவு செய்யப்பட்டும், பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை
உடன்குடியில் அனல் மின் நிலையம் 
உடன்குடியில் 1,320 மெகா வாட் திறனில் அனல் மின் நிலைய கட்டுமான பணியும் 2017- இல் தொடங்கியது. செலவு 7,359 கோடி ரூபாய். 2021 - 22 -இல் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. இதுவரை பணிகள் முடியவில்லை
குந்தாவில் நீரேற்று மின் நிலையம் 
நீலகிரி மாவட்டம், குந்தாவில் நீரேற்று மின் நிலையம் அமைக்கும் பணி, 2018 பிப்ரவரியில் தொடங்கியது. செலவு 1,831 கோடி ரூபாய். 2021 - 22 இல் உற்பத்திக்கு திட்டமிட்ட நிலையில் இதுவரை பணிகள் முடியவில்லை
புளியஞ்சோதலையில் கொல்லிமலை நீர் மின் நிலையம் 
திருச்சி மாவட்டம், புளியஞ்சோதலையில் 20 மெகா வாட் திறனில் கொல்லிமலை நீர் மின் நிலையம் அமைக்கும் பணி 339 கோடி ரூபாய் செலவில் 2016 ஆம் ஆண்டு தொடங்கியது.  அங்கு 2021 ஏப்ரலில் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது.  இதுவரை தொடங்கப்படவில்லை.

மின் வாரியம், தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்குவதைக்  குறைத்து,  சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, ஒரு மின் நிலையம் கூட இதனால்  செயல்பாட்டுக்கு வரவில்லை.

#தமிழகத்தில்_நிறைவு_பெறாத_மின்திட்டங்கள்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ_இராதாகிருஷ்ணன்
#ksrpost
20-4-2023.


Wednesday, April 19, 2023

#Home library #Bookshelf #நூல்களை அடுக்குதல்

#Home_library  
#Bookshelf
#நூல்களை_அடுக்குதல்
————————————————————-
“I still love the book-ness of books, the smell of books: I am a book fetishist—books to me are the coolest and sexiest and most wonderful things there are.”





















― Neil Gaiman



A book is a piece of silence between the reader's hands. The person who writes it is quiet. The person who reads it doesn't break the silence.

நூல்களை அடுக்குதல்



"நூல்களை அடுக்குதல் ஒருவகையில் மனதையும் அடுக்குவதுதான் "என்று ஆரம்பித்துள்ளார். பெரும்பாலும் அவர் குறிப்பிட்டிருப்பது சரியே. நூல்கள் எவ்வாறு உங்கள் மனதில் அடுக்கப்பட்டுள்ளதோ ,தோராயமாக அதை ஒத்தே உங்கள் மனமும் இருக்கும்  .நூலற்றவர்களின்  மனம் ;மனமாகப் பொருள் கொள்ள தக்கது அல்ல  




இனம் தெரியாத ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்தால் கூட வீட்டில் நூல்கள் அடுக்கப்பட்ட விதத்தை வைத்தே ,அது யாருடைய வீடாக இருக்கும் என கணித்து விட முடியும். எம் எல் ஏ ;எம் பி வீடுகளெனில் அடுக்கும் பணியை பெரும்பாலும் வெள்ளையடிக்க வந்தவரே செய்திருப்பார். அடுத்து வீடு வெள்ளையடிக்கப்படும் வரையில் நூல்கள் அதே வரிசையில் இருக்கும் .வாசிக்காதவன் கையில் மாட்டிக்கொள்கிற நூல்கள் ;விலங்கு மாட்டி ஜெயிலில் இருப்பது போலத்தான். குறைந்த பட்சம் வாசிக்காதவன் எனினும் ஆசையுள்ளவன் கையிலேனும் போய் சேருதற்கே நூல்கள் விரும்பும். எப்போதேனும் படித்துவிடமாட்டானா ?

புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் கல்கியின் பொன்னியின் செல்வன் ,அடுத்து உப பாண்டவம் ,சுஜாதாவின் சிறிய நூலான "தமிழில் திரைக்கதை எழுதுவது எப்படி ?,ல சா ராவின் தடித்த நூல் ,புஷ்பா தங்கதுரை ,ஜீரோ டிகிரி இப்படி...முக்கியமாக கார்க்கியின் தாய் ,இடையிடையே ரஷ்யன் புக்ஸ் எனில் , தாறுமாறான அடுக்குதல் எனில்; ஒரு வெற்றிப்படம் கண்டுவிட்ட சினிமா இயக்குனர் வீடாகத்தான் இருக்கும். எழுத்தாளர்கள் இவர்களிடம் அதிகம் மாட்டிக் கொள்ளாமல் பிதுங்கி வெளியேறிவிட வேண்டும். நூல்கள் அதிகம் வீட்டிலிருக்க வேண்டியதின் அவசியம் பற்றி மணிக்கணக்கில்  இவர்கள் பேசுவார்கள்.  எழுத்தாளர்களுக்கும் அதுபற்றி பாடம் சொல்வார்கள். எதிரில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே இவர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கும். புதிய பவிசில் இருப்பவர்கள் எவருக்கானாலும் சரி; இப்படி எதிரில்  மறைக்கப்பட்டுவிடுகிறது. புதிதாக யோகா பயில்பவன் ,புதிதாக கிறிஸ்தவத்திற்கு மாறியவன் ,இப்படி இந்த வரிசை நீளமானது, புதிதாக வெளிநாடு சென்று வந்த கவிதாயினிகள் வரையில் நீளக் கூடியது 

நான் கண்டு வியந்த நூலகங்கள் என ராஜ மார்த்தாண்டனின் நாகராஜ் மேன்ஷன் அறை நூலகத்தையும்,தென்காசியில் அண்ணாச்சி விக்ரமாதித்யன் நூலகத்தையும் சொல்வேன். சி. மோகனின் அறையில், அந்த அறைக்குள் நுழைய போகிற தேவதைக்காக ,அவள் நின்று சுற்றி காண்பதற்காக சில புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும். தேவதைகள் புத்தகங்கள் பேரில் கடும் அலட்சியம் கொண்டவர்கள் என்பது அந்த அறைக்கு இப்போதுவரையில் தெரியாது.அந்த அறையில் புத்தகங்களின் அருகில் மதுவற்ற கண்ணாடிக் குவளைகள் உண்டு. பிரபஞ்சனின் அறை நூலகம் இயல்பானது ,அக்கறையற்றது ,அதன் மீதமர்ந்து பெண்கள் பேசிக் கொண்டிருந்தால் அவருக்கு காண்பதெல்லாம் 
இன்பமாகிவிடும் .நாம் அடுத்து காணச் செல்லும் போது;  ஒரு பெண் இப்போதுதான் வந்து சென்றார் என்பதற்கான ஒரு தடயமும் அவரிடம் இராது அறையிலும் இராது. நாம் தான் கற்பனையால் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். எந்த புத்தகக்கட்டின் நடுவில் கால்களை மடக்கி அவள் சுகாசனத்தில் இருந்திருப்பாள் என்பதை; பிரபஞ்சன் காந்த கண்களுடன், கைகளை பின்தலைக்கு மடக்கி சிரிக்கும் சிரிப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம் .அல்லது வந்திருந்த பெண்ணிடம் பேச நினைத்து தவறிய விஷயங்களையே அவர் நம்மிடம் பேசிக் கொண்டிருப்பார் .அதுகொண்டடையலாம்

மார்த்தாண்டனின் நூல்கள் கால்கள் கொண்டவை. பத்துக்குப் பத்து சிறிய அறையில் நடுவில் இரண்டு ஒற்றை மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதற்கு மூன்று  பக்கமும்  வளர்ந்து சுவர் போல நின்று கொண்டிருக்கும் புத்தகங்கள். எந்த புத்தகத்தை கேட்டாலும் முதலில் மறுப்பதும், பின்னர் நிபந்தனையோடு கொடுப்பதும் சிறிது நேரத்திலேயே நிபந்தனையை மறந்து விடுவதும் அவர் இயல்பு.தினமணியில் வேலைபார்த்ததால் நிறைய நூல்கள் அவரை நோக்கி வந்து கொண்டேயிருக்கும். அவரால் நினைத்தாலும் கொடுக்காமல் முடியாது.

நிபந்தனையும் பெரிதாக ஒன்றுமில்லை கட்டுரை எழுத தேடும்போது கிடைக்காது என்பார். ஏகதேசம் அறையிலுள்ள எல்லா நூல்களையும் படித்திருப்பார் மார்த்தாண்டன் .   நம்பி நிறைய நூல்களை அவரிடம் பெற்றுக் கொள்வார் .சில சமயங்களில் சென்றதுமே நம்பி ஏதேனும் கேட்பார். அதற்காக மார்த்தாண்டன் சில பத்திரிகைகளையெடுத்து அந்த வளரும் நூல்ச் சுவர்களில் அடிப்பார். பயமாக இருக்கும். புகைபோல எழும்பும், தூசு அடங்க ஒன்றிரண்டு மணிநேரங்களேனும் ஆகும்

 அந்த அறை அவருடைய நிறைய நண்பர்களுக்கான விருந்து அறையும் கூட. மீதமுள்ள குப்பையிடங்களில்  மூன்று பேராகத் தூங்கியிருக்கிறோம். மார்த்தாண்டனின் அறையை நம்பி ,ஒரு இளைஞன் தமிழ்நாட்டின் எந்த ஊரிலிருந்தும் கிளம்பி சென்னைக்கு அப்போது சென்று வரலாம். அவ்வளவு பரந்து விரிந்த மனம் கொண்ட அறை அது .கதவுக்கு ஒரு சிறிய சாவி உண்டு. சாவியை காட்டிலும் குண்டூசிக்கு சரியாக இணங்கக் கூடியது அதன் பூட்டு.  இருந்தாலும் திகைத்து தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களுக்கு தாக்கோல் எங்கிருக்கிறது? என்பதை சரியாக மார்த்தாண்டன் சொல்லித்தருவார்.   நானறிந்த அளவில்  திருட்டே நடைபெறாத அறை

நம்பியையும் பகவதியம்மாவையும் பார்க்கச் செல்வோருக்கு, அனைத்து பொருட்கள் புத்தகங்கள், சாமிகள்  என எல்லோரையும் தரையில் அமர்த்தி; அதன் நடுவில் அமர்ந்து கொண்டிருப்பார்கள்,இந்த காட்சியே அவர்கள் வாழ்வு பிரயாணம் எல்லாம். வேறு வீட்டிற்கு மாறுவதற்கு தயாராக எப்போதும் இருந்து கொண்டிருப்பவர்களாகவே   அந்த காட்சி எனது மனதிற்கு பதிவாகியிருக்கிறது. நம்பி ஊரில் இல்லாத சமயங்களில் எல்லாம் தொடர்ந்து பகவதியம்மாவிடம் வசை வாங்குவதெல்லாம் தரையில் அமர்ந்திருக்கும் இந்த புத்தகங்களே. அதன் ஆசிரியர்கள் விபூதிபூஷன் பந்தோபாத்யாவாகவும் இருக்கலாம் ,சபரிநாதனாகவும் இருக்கலாம் . 

[ நம்பியெனப்படுவது கவிஞர் விக்ரமாதித்யனே ]

(எழுதியவர். பெயர் இல்லை ஆனால் கன்னியாகுமரி மாவட்டதை சார்ந்தவர் என



தெரிகிறது)

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ_இராதாகிருஷ்ணன்
#ksrpost
19-4-2023.
Photos - personal library @ my  home


#அகழாய்வு தளம் #excavation site #சீர்காழி



—————————————
சீர்காழி யில் ஏராளமான செப்பேடுகள் மற்றும் ஐம்பொன் சிலைகள்…இந்த மரபுகளை பண்பாட்டகளின் சுவடுகளை பாதுகாக்க வேண்டும்…






அதுதான் தமிழ்மண்…
மற்றபடி இவர் மண் அவர் மண் உவர் மண் அல்ல இது தமிழகம்…

இவை, ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.

#அகழாய்வு_தளம் #excavation_site #சீர்காழி

 #KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ_இராதாகிருஷ்ணன், #அரசியல்,
#ksrpost
18-4-2023.

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...