1. நியூட்ரினோ நோக்கு கூடத்திற்கான திட்ட வரைவு அரசிடம் எப்போது தரப்பட்டது.
2. அரசு இந்த திட்டவரைவை எப்போது ஏற்றுக் கொண்டது?
3. முதலில் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு ? தற்போது நிதி தேவை எவ்வளவு? திட்டம் முடிவடையும் போது அதன் நிதித் தேவை எவ்வளவு இருக்கும்?
4. தமிழ்நாட்டில் எத்தனை இடங்கள் நியூட்ரினோ நோக்கு கூடத்திற்காக தேர்வு செய்யப்பட்து? முதலில் இந்த திட்டதித்ற்காக எந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டது? அவற்றில் இருந்த பிரச்சனைகள் என்ன?
5. தேனி பொட்டிப்புரம் மலை தேர்ந்தெடுக்கப்பட்டதன் அவசியம் என்ன?
6. தேனி பொட்டிபுரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த மலையின் பாறைத் தொடர் எவ்வளவு தூரம் கொண்டது? மலையின் எந்த பகுதியெல்லாம் ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்டது?
7. இந்த மலைகள் எந்தவித பாறைகளை கொண்டது?
8. இந்த பகுதியில் இந்த திட்டத்திற்காக புவியியல் ஆய்வு செய்யப்பட்டனவா? அதன் அறிக்கை உண்டா?
9. இந்த திட்டத்திற்காக எந்த எந்த துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது?
10. இந்த திட்டத்திற்காக மொத்தம் கையகப்படுத்தப்பட்ட இடம் எவ்வளவு?
11. இந்த திட்டத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலம் எப்படிபட்டது ? விளைநிலமா? தரிசு நிலமா ?
12. இந்த திட்டத்திற்காக எடுத்துக் கொண்ட இடம் இயற்கையாகவே எதுவும் விளையாத தரசுநிலமா? அல்லது தண்ணீர் இல்லை என்பதால் தரிசான நிலமா?
13. பொட்டிப்புரம் பகுதி ஒரு மலைஅடிவாரப் பகுதி, தேசிய நெடுஞ்சாலைக்கும் இந்த இடத்திற்கும் பல கிலோ மீட்டர் தூரம் இருக்கும், இந்த திட்டத்திற்காக தேசிய நெடுஞ்சாலையை இணைக்க புதிய சாலை போக்குவரத்து ஏற்படப் போகின்றதா? எந்த வழிப்பாதை அப்படி பயப்படப் போகின்றது?
14. சாலைப் போக்குவரத்து தவிர வேறு போக்குவரத்துக்கு திட்டம் உண்டா? (ரயில் போக்குவரத்து போன்ற…)
15. புதிய சாலைக்காக சாலை அகலப்படுத்தப்படுமா ? அதற்காக நிலம் தேவைப்படுமா? எவ்வளவு?
16. இந்த திட்டத்திற்காக மேலும் நிலம் தேவைப்படுமா?
17. சுரங்கம் தோண்ட எவ்வளவு காலம் ஆகும்? இரண்டு கிலோமீட்டர் சுரங்கம் தோண்ட எந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? அதில் அவர்களின் முன் அனுபவம் என்ன?
18. தரமான கிரானைட் மலை இது என்றால் வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கல்லின் இன்றைய பண மதிப்பு எவ்வளவு?
19. இரண்டு கிலோமீட்டர் சுரங்கம் தோண்டும் போது வெட்டி எடுக்கப்படும் கல் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் இருந்து எடுத்துச் செல்ல முடியாது அப்படியானால் எந்தப் பகுதியில் அடுக்கிவைக்கப்படும்?
20. வெட்டி எடுக்கப்படும் போது ஏற்படும் தூசி, கழிவுகள் கட்டுமானத்திகு பயன்படுத்தப்படும் என்றாலும் அதுவரை எந்த இடத்தில் கொட்டிவைக்கப்படும்?
21. அதிக காற்று வீசும் இந்த பகுதியில் இந்த தூசி, கழிவுகளால் காற்று மாசுமாடு எவ்வாறு இருக்கும்?
22. ஒரு கல் வெட்டி எடுக்கப்பட்டு எத்தனை நாட்களுக்குள் வெளியே எடுத்துச் செல்லப்படும். அப்படி எடுத்துச் செல்ல ஒரு நாளைக்கு எத்தனை கனரக வாகனங்கள் பயன்படும்?
23. பாறைகளை வெட்டிஎடுக்க எந்தவகை வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும் ? ஒரு நாளைக்கு எத்தனைமுறை வெடிவைக்கப்படும்?
24. பாறை வெடிகளால் அதிர்வுகள் எவ்வளவு தூரம் உணரப்படும்?
25. பாறையின் தொடர்ச்சியின் முழுமையும் அதிர்வு இருக்குமா?
26. தோண்டப்பட்ட சுரங்கத்தின் உள்ளே உள்கட்டுமானப்பணி எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப்படும்? உள்ளே காற்றோட்டம் தேவைப்படுமா? அதற்காக என்னவித கருவிகள் பொருத்தப்படும்?
27. இந்த திட்டத்திற்கு என்று கால அளவு உண்டா?
28. கட்டுமானத்திற்க்கான தண்ணீர் எங்கே இருந்து கொண்டுவரப்படும்?
29. கட்டுமானத்திற்கு தண்ணீர் எவ்வளவு தேவைப்படும்.
30. 18 கிலோ மீட்டர் தூரம் முல்லை பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது எப்போது தொடங்கும் ?
31. கட்டுமான பணிகாலம் தவிர தொடர்ந்து ஆய்வு நேரத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு , எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படும்?
32. முல்லைப் பெறியாற்றில் இருந்து தண்ணிர் எடுக்கும் போது அந்த தண்ணீர் இதற்கு முன் ஒரு விளை நிலத்திற்கோ , கிராமத்தின் குடிநீருக்கோ சென்று இருக்கும் அந்த பற்றாக்குறையை என்ன செய்வது?
33. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் திட்டம் தடைபடுமா? அப்போது ஆய்வு பணி பாதிக்காமல் இருக்க என்ன திட்டம் உள்ளது?
34. நோக்குகூடத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் நோக்கு கூட பணிகளுக்கு மட்டுமா அல்லது அந்த வழிப்பாதையில் உள்ள கிராமங்கள் குடிநீருக்கு பயன்படுத்தலாமா?
35. தண்ணீரை தேக்கி வைக்க அந்த இடத்தில் என்ன வசதி உள்ளது எவ்வளவு அளவில் உள்ளது?
36. இந்த நோக்கு கூடத்திற்கு மின்சாரம் தேவைப்படுமா? அப்படியானால் எவ்வளவு? அந்த மின்சாரம் எங்கே இருந்து கொண்டுவரப்படும்?
37. ஆய்வுக்காக 50ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்படும் என்றால் அந்த இரும்பு நாட்டின் எந்தபகுதியில் இருந்து எடுத்துவரப்படுகிறது?
38. இந்த இரும்பு மற்றும் இதற்காக கருவிகளை எந்த விதமான போக்குவரத்து மூலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது?
39. உணர்வு கருவியை 50ஆயிரம்டன் எடை கொண்ட இரும்பு கொண்டு உருவாக்கப்படும் என்றால் அதன் இடையில் செருகப்படும் கண்ணாடி தட்டுகளின் உள்ளே செலுத்தப்படும் வாயு என்ன வகையைச் சார்ந்த்து?
40. அந்த வாயு ஒரு முறை மட்டுமே நிறப்ப்படுமா அல்லது அடிக்கடி மாற்றப்படுமா?
41. அந்த கண்ணாடி தட்டு இடையில் பழுதாவதற்கும் அந்த வாயு வெளியேறுவதற்கும் வாய்ப்பு உள்ளதா? அப்படி வெளியேறினால் ஏதேனும் ஆபத்து உண்டா?
42. இந்த உணர்வு கருவி மின்காந்தமாக மாற்றப்டும் போது அதன் ஈர்ப்புதிறன் எவ்வளவு தூரம் இருக்கும்? இதனால் பாறையின் மேற்பரப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
43. பூமிக்கு அடியில் இந்த உணர்கருவியின் காந்த ஈர்ப்பால் நிலத்தடிநீரோட்டம் மாற்றமடைய வாய்ப்பு உண்டா?
44. மழை காலங்களில் மலைகளில் இருந்து வரும் தண்ணீர் கீழே உள்ள நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது? இந்த உணர்வு கருவியால் அந்த நீர் ஏதேனும் தடைபட வாய்ப்பு உள்ளதா?
45. 50ஆயிரம் டன் எடையுள்ள இரும்பு கொண்டு உருவாக்கப்படும் உணர்வு கருவி ஒன்று மட்டும் செயல்படுமா அல்லது தேவையை ஒட்டி மேலும் அதிகரிக்கப்படுமா? அதற்னான முன் தயாரிப்பு உண்டா?
46. அப்படியானால் அதற்கும் தண்ணீர் தேவைப்படுமே அப்போது எந்த இடத்தில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும்?
47. நியூட்ரினோ வினை புரியாத ஒரு அடிப்படை துகள் என்றால் அதை வினையாற்ற அதனோடு ஏதேனும் வேறு ஒன்றை மோதச் செய்ய திட்டம் உள்ளதா,?
48. நோக்கு கூடத்தின் உள்ளே ஏதேனும் இரசாயப் பொருட்கள் பயன்படுத்தப் படுமா? அப்படியானால் என்ன மாதிரியான இரசாயனப் பொருட்கள்? அவை எதற்கு பயன்படுத்தப்படும்?
49. உணர்வு கருவிக்கு அருகே எவ்வளவு தூரம் வரை ஆய்வாளர்கள் மற்றும் பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்?
50. ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் நோக்குகூடத்தில் பணியில் இருப்பார்கள். அவர்களின் வேலை என்ன?
51. உணர்வு கருவி சுரங்கத்தின் உள்ளே திறந்த வெளியில் இருக்குமா ? மூடப்பட்ட பகுதியில் இருக்குமா?
52. மழைமாணி, வெப்பமாணி போன்ற ஒரு கருவிதான் இங்கே வைக்கப்படும் என்றால் வெறும் கணக்கெடுப்பு மட்டும் தான் நடத்தப்படுமா?
53. குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் செயல்படும்என்றால் அதற்கு பின் இந்த சுரங்கம் எதற்காக பயன்படுத்தப்படும்?
54. சுரங்கம் தோண்டும்போது ஊழல் போன்ற காரணம் காட்டி இடையில் நிறுத்தப்பட்டால் அந்த காலகட்டங்களை தாண்டி தேவைப்படும் நிதிக்கு யார் பொறுப்பு?
55. அணுக்கழிவு மேலாண்மை குறித்து அனுமதிக் கடிதம் மாநில சுற்றுச்சூழல் கழகத்தில் சமர்பித்திருப்பது எதனால்?
56. இல்லை நாங்கள் அதை மாற்றிவிட்டோம் என்றோ மாநில சுற்றுச் சூழல் கழகம் தான் தவறு செய்த்து என்றால் மறு விண்ணப்பத்தில் என்ன உள்ளது?
57. ஆபத்தை இல்லாத ஆய்வுக்கு அவரச கால பாதைகள் எதற்கு?
58. இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆய்வு திட்டத்தை கட்டுப்படுத்துமா?
59. நோக்குமையத்தில் பணி மற்றும் ஆய்வில் யாரெல்லாம் ஈடுபடுவார்கள்? பயன் பெறுவார்கள்?
60. வெளிநாட்டினருக்கு இந்த ஆய்வில் இடம் உண்டா? அது பணியிலா? ஆய்வு மாணவர்காகவா?
61. ஆய்வு பணியின் போது ஏதேனும் கழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அது எந்த வகையில் இருக்கும்?
62. நியூட்ரினோ துகள்களை வேகப்படுத்த அல்லது செயலாற்ற அணுசக்திபயன்படுத்த முடியுமா?
63. இந்த நோக்குகூடத்தின் கண்காணிப்பு எங்கே இருந்து கண்காணிக்கப்டுகிறது?
64. நியூட்டிரினோ தொழிச்சாலை என்றால் என்ன? அதுதான் லட்சியம் என்ற கொள்கை இந்த நோக்கு கூடத் திட்டத்திற்காக ஏன்வகுக்கப்பட்டுள்ளது? அப்படியானால் செயற்கையான நியூட்ரினோக்களையோ அதை அதிகப்படுத்தும் வேலையையோ செய்யுமா?
65. நியூட்ரினோ துகள் கண்டறியப்பட்டால் அதை ஆக்கப்பூர்வ பணிகளை தவிர அழிவுக்காக பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை அறிக்கை ஏதாவது உண்டா?
66. நியூட்ரினோ கண்டுபிடிப்புகளில் இந்திய விஞ்ஞானிகள் சாதனை செய்துவிட்ட பிறகு இந்த தொழில் நுட்பத்தை இந்தியா மட்டும் தான் பயன்படுத்தும் என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு?
67. தொலைத் தொடர்பு போன்றவற்றில் பெரும் சாதனையை படைத்தாலும் படைக்கலாம் என்றாலும் அது முழுக்க முழுக்க அரசு கட்டுபாட்டில் மட்டுமே இருக்குமா? அல்லது எந்த கம்பெனி முன்னால் வருகிறதோ அவர்களுக்கு குத்தகைக்கு விடப்படுமா? இதற்கு யார் உத்ரவாதம் தருவது?
68. கொடைக்கானல் சூரிய நோக்கு கூடம் போலதான் இந்த ஆய்வு என்றால் பாதுகாப்புக்கு சாதாரண காவலாளிகள் பாதுகாப்பில் இருப்பார்களா அல்லது தேசிய தொழில் பாதுகாப்பு படை பாதுபாப்புக்கு இருப்பார்களா?
69. இந்த இயற்பியல் ஆய்வை ஏன் அணுசக்தி கழகம் எடுத்து நடத்தவேண்டும்? நிதி நிலையை யார் கையாளப் போகின்றார்கள்?
70. 21 கல்வி நிறுவனங்கள் பங்கேற்பதாக சொல்லப்படுகிறதே அதில் எத்தனை நிறுவன்ஙகள் அரசு நிறுவனங்கள்?
71. கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வில் எந்த விதங்களில் பங்கேற்கப் போகின்றார்கள்.?
72. இந்த திட்டத்திற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஏதேனும் முதலீடு போட்டுள்ளார்களா?
73. இந்த நோக்கு கூடத்தை உருவாக்கும் காலகட்டத்தில் எளியமுறையில் இதே ஆய்வை சுரங்கமின்றி செய்ய முடியும் என புதிய கண்டுபிடிப்பு வந்துவிட்டால் இந்த சுரங்கத்தை என்ன செய்வது?
74. ம்லையின் பின் பகுதியில் எந்தவிதமான ஆய்வு செய்யப்பட்டது?
75. மேற்கு தொடர்ச்சி மலையில் தரமான கிரானைட் கற்கள் உண்டு என்று தெரிந்த பிறகு குவாரிகள் அமைக்க திட்டமிடுபவர்களை தடுக்க ஏதாவது நடவடிக்கைகள் உண்டா?
76. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மாணவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுவார்கள்?
77. மதுரையில் அமைந்துள்ள கண்காணிப்பு மையத்தின் வேலை என்ன?
78. அப்பகுதி மக்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பு உண்டா? அல்லது இப்பகுதியில் நடமாடக்கூடாது போன்ற கட்டுப்பாடு உண்டா?
79. மதுரை, தேனி மாவட்டங்கள் இந்த நோக்குகூடத்தினால் பெரும் வளர்ச்சியடைய்யும் என்பது எந்த் வித்த்தில் ?
80. குவாரி தோண்டுவதில் இருந்து இரும்பு சப்ளை செய்வதிலிருந்து தொலை தொடர்புக்காக கண்டுபிடிக்கப்பட்டாலும் பயன்பெறப் போவதும் கொள்ளை லாபம் அடிக்கப்போவது பெரும் முதலாளிகளே, இதில் சாதாரண மக்களுக்கு என்ன பயன்?
81. 1500 கோடி ரூபாய் எந்த எந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது,?
82. 21 கல்வி நிறுனங்கள் இந்த ஆய்வில் தங்களை இணைக்கும் போது மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வார்களா? நிறுவனங்கள் ஏதாவது கட்டணம் இதற்காக வசூல் செய்து வருகிறதா?
83. அச்சமேற்பட்டுள்ள நோக்குகூடப் பகுதியில் மக்களிடம் ஐஎன்ஒ சார்பாக என்ன விதமான கூட்டங்கள், பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளது? எத்தனை முறை நடத்தப்பட்டது? எந்த வடிவங்கள் பயன்படுத்தப்படுகிறது?
84. சுற்றுப்புற கல்விநிறுவங்களுக்கு இந்த நோக்குகூடம் எந்த வித்தில் பயன் உள்ளதாக இருக்கும் ( கல்லூரிகள்,பள்ளிகள்).?
85. நிதி பற்றாக்குறை காரணமாக திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டால் என்ன மாற்றுத் திட்டம் உள்ளது?
86. இந்த திட்டம் முழுக்க முழுக்க இந்திய நிறுவனங்கள் மட்டுமே முன் நின்று நடத்தும் திட்டமா?
87. இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு ஆய்வகங்களோடு இது குறித்து ஏதேனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதா?
88. உணர்வு கருவி தொழில் நுட்பம் எந்த நாட்டை சார்ந்த்து?
89. உணர்வு கருகிக்கான தொழில்நுட்ப கருவிகள் எந்த நாட்டில் இருந்து வாங்கப்படுகிறது?
90. ஐஎன்ஒ வீடியோ படக்காட்சியில் நியூட்ரினோ உணர்வு கருவி முடிவுகளை கண்டுப்பாட்டு அறை கணினியில் பதிவு செய்யப்படும் .இந்த பதிவை உலகில் எங்கிருந்து வேண்டுமானலும் டேட்டாக்களை டவுன்லோடு செய்து ஆய்வு செய்யலாம் என்றால் ஆய்வை எந்த நாட்டினரும் பயன்படுத்திக் கொள்ளலாமா?
91. அதே வீடியோ காட்சியில் கழிவு நீர் வெளியேறும் என்று ஒரு இடத்தில் வருகின்றதே அந்த கழிவு நீரில் ஏதாவது நச்சுத்தன்மை உண்டா? அந்த கழிவு நீரை எந்த வழியாக வெளியேற்றுவார்கள் ? எந்த பகுதிக்கு அந்த கழிவு நீர் கடத்தப்படும்.?
92. அமெரிக்க பெர்மி லேப்பிற்கும் இந்திய நியூட்ரினோ நோக்கு கூடத்திற்கும் என்னவித தொடர்பு உள்ளது?
93. பெர்மி லேப் ஐஎன்ஒ வோடு ஏதேனும் ஒப்பந்தம் செய்துள்ளதா?
94. நியூட்ரினோ பீம் (தூண் போன்ற கற்றை) என்றால் என்ன?
95. இதுவரை எத்தனை நாடுகளில் நியூட்ரினோ நோக்கு கூடம் உள்ளது?
96. நியூட்ரினோவில் ஏதேனும் சாதனை படைத்த நாடு உண்டா?
97. சிங்காராவில் இருந்து இந்த திட்டம் மாற்றம் அடைய என்ன காரணம்?
98. நியூட்ரினோ என்ற வார்த்தை எளிய மக்களுக்கு புதியவை, எப்படிமக்களிடம் இந்த திட்டம் குறித்து விளக்கப்படுகிறது? இதற்காக எந்த நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளன?
99. இத்தாலியில் உள்ள நியூட்ரினோ ஆய்வகம் சிலகாலம் மூடப்பட்டதற்கு என்ன காரணம்?
100. இத்திட்டத்திற்கு இந்த பகுதியில் மக்கள் ஆதரவு தராமல் தொடர்ந்து போராடினால் மாற்று ஏதேனும் உண்டா? அல்லது கைவிடப்படுமா?
-அ.சத்யமாணிக்கம், கலிலியோ அறிவியல் மையம்.
No comments:
Post a Comment