ஆலங்குளம் சிமெண்ட் ஆலைப் பிரச்சனை குறித்து,
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் சிமெண்ட் ஆலையினை திரும்பவும் நவீனப்படுத்த வேண்டுமென்று, மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டியதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிமெண்ட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுஅடைவது குறித்து 1986ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 1997காலகட்டத்தில், நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை முதல்முறையாக நவீனப்படுத்தப்பட்டது.
தற்போது திரும்பவும் மாசு வெளியேறுவதும், ஆலையினை மூடத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இப்பிரச்சனை குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளையில் மனு செய்யப்பட இருக்கின்றது.
இந்நிலையில் நேற்றைக்கு (18-02-2012) சட்டமன்றத்தில் சிமெண்ட் ஆலைகுறித்த எதிர்கட்சிகள் பிரச்சனை எழுப்பியபோது, தொழில்துறை அமைச்சர். தங்கமணி. “ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் 75,000டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு 25,000பேர் பயனடைந்துள்ளார்கள். தற்போது ரூ190கோடி செலவில் ஆலையினை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது” என்று கூறியுள்ளார். இது உண்மையா என்று தெரியவில்லை.
இந்த சிமெண்ட் ஆலைப் பிரச்சனைக் குறித்து தி.மு.க உட்பட அனைத்துக் கட்சிகளும் கடந்த மாதம் போராட்டங்கள் நடத்தியுள்ளது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ அவர்கள் இப்பிரச்சனையில் தொடர்ந்து போராடி வருகின்றார்.
சிமெண்ட் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது, ஆலங்குளம் தமிழ்நாடுசிமெண்ட் ஆலைக்கு உற்பத்திக்கான ஆதாரங்களும், திறனும் இருந்தும் அதனைச் சரியாக பராமரிக்காமல், சுற்றுச்சூழலையும் மாசடையவைத்து ஆலையினையும் மூடத் திட்டமிடுவது ஏனோதெரியவில்லை.

No comments:
Post a Comment