Monday, February 23, 2015

நாளந்தாவிலும் முறைகேடா!


திரும்பவும் நாளந்தா உதயமானது அனைவருக்கும் ம்கிழ்ச்சியை அளித்தது. ஓராண்டுக்குள்ளே அங்கு சர்ச்சைகள் எழும்ப ஆரம்பித்திருப்பது வேதனையான விஷயம். சுப்ரமணிய சுவாமி போன்றோர் தலையிட்டு பிரச்சனைகள் எழுந்தன.

தன்னாட்சி பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் ரூபாய் 3,000கோடி மொத்த மதிப்பீட்டில் அண்டை நாடுகளௌடைய ஆதரவோடு அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தினை இந்தியாவின் வெளியுறவுத்துறை கண்காணிக்கமட்டும் தான் பொறுப்பு இருக்கிறது. சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் மைதிரிபால் சிரிசேனா உடன் இப்பல்கலைக்கழகம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நோபல் பர்சு பெற்ற அமர்த்தியாசென் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார். அவர் பதவி விலக வேண்டுமென்றும் இரண்டாம்முறை அவருக்கு வேந்தராகும் பொறுப்பை வழங்கக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கின்றது.  நாளந்தா பல்கலைக்கழகத்தின் துவக்கவிழாவின் போது அமர்த்தியா சென் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை.

இந்தப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பிலிருக்கும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம். வேந்தராக இருக்கும் அமர்த்தியாசென் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி, தனது கடிதத்தை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார்.

எவ்வித தேர்வுக்கும் உட்படாமல் டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் துணைப்பேராசிரியராக இருந்த கோபா சபர்வால்க்கு 5லட்சம் சம்பளம் எப்படி வழங்கலாம் என்பது ஒரு சர்ச்சை. அத்தோடு, சபர்வால் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இரண்டு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. சபர்வாலின் தோழி அஞ்சனா சர்மா என்பவருக்கு சிறப்புப் பணி என்ற நிலையில் 3.5இலட்சம் சம்பளம் வழங்கியதாக அடுக்கடுக்காக குற்றச் சாட்டுகள்.

இவற்றையெல்லாம் கேட்கவே வேதனையாக இருக்கின்றது.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் ஜாண்ஸனும், நானும் சில ஆண்டுகளுக்குமுன் நாளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தோம். ஜாண்ஸன் எங்களில் ஆக்ஸ்போர்டைவிட , திட்டமிட்டு பண்டையகாலத்தில் குப்தர்களால் கட்டப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் திரும்பவும் உதயமாகவேண்டுமென்று மனப்பூர்வமாகச் சொன்னார்.

இந்தியாவின் பொற்காலம் குப்தர்கள் காலம். அனைத்து வளர்ச்சிகளும் குப்த மன்னர்கள் காலத்தில் நடைபெற்றன. வரலாறு, நமது வளர்ச்சி என்ற சிந்தனை உள்ளவர்களுக்கு நாளந்தா பல்கலைக்கழகம் திரும்பவரவேண்டும் அதுமறுமலர்ச்சி அடையவேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் கட்டாயம் இருக்கும்.

இந்தப்பல்கலைக்கழகம் திரும்ப துவங்கப்படவேண்டுமென்று   இதயசுத்தியோடு  23.11.2010-அன்று  தினமணியில் நாளந்தா பல்கலைக்கழகம் பற்றிய தரவுகளோடு நான் எழுதிய கட்டுரை வெளியானது.

தினமணி கட்டுரை வாசிக்க : - இங்கே 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...