Saturday, February 14, 2015

அற்புத ஓவியர். கோவில்பட்டி. கொண்டையராஜூ.




1950 -60களில் மதுரைக்குத் தெற்கே புத்தாண்டு பிறந்துவிட்டால்  திரு.பழ.நெடுமாறன் அவர்கள் தந்தையார்,பாட்டனார்களால்  வெளியிடப்பட்ட விவேகானந்தர் தினக்காலண்டர்களும், கோவில்பட்டி.கொண்டையா ராஜீ வரைந்த ஓவியங்கள் அடங்கிய மாதாந்திர காலண்டர்களும், மஞ்சள் நிற அட்டையில் திருநெல்வேலி வாணியபஞ்சாங்கங்கள் அத்தனை வீடுகளிலும் காணலாம்.

மறைந்த ஓவியர் கொண்டையா ராஜு ஓவியங்கள் அற்புதமானவை. அவர் குடும்ப வாரிசுகள் இன்றைக்கும் அவற்றைப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். அவருடைய வாரிசுகளில் ஒருவரான நண்பர் மாரீஸ்.
ஓவியரைப் பற்றி சிறப்பாகச் சொல்வார். கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் சென்றாலே கொண்டையராஜூ நினைவுக்கு வருவார்.  

மாதாங்கோவில் தெருவுக்கு ஒரு சிறப்புகள் உணடு.
காலில் செருப்பில்லாமல் வறுமையில் வாடியபோது வ.வு.சி உலவிய தெரு இது . மகாகவி பாரதி, காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், இசைமேதை விளாத்திகுளம் சாமிகள், பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார், நாவல சோமசுந்தரபாரதி, ஏன்.என்.சிவராமன் திராவிட இயக்கத்தின் தூணாக இருந்த ஏ.வி.கே சாமி போன்ற ஆளுமைகள்  உலாவிய தெரு என்பது சிறப்பான செய்தி. காந்தியார் கோவில்பட்டிக்கு வந்திருந்த பொழுது காந்திமைதானத்திற்கு இத்தெருவழியாக நடந்து சென்று கூட்டத்தில் உரையாற்றினார். 

கடந்த 2014 நவம்பர் மாதம் 6ம்தேதி கொண்டையராஜு பற்றி தமிழ் இந்து நாளேட்டில் ரெங்கையா முருகன் சிறப்பான கட்டுரை எழுதியுள்ளார்.  http://goo.gl/81eeeO


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...