Thursday, February 5, 2015

காணமல் போன பேனா முனை:

காணமல் போன பேனா முனை:
ஆதி காலத்தில் எழுத்தாணியில் எழுதினர். பின்பு பேனாவை கண்டுபிடித்தனர். அந்த பேனாவின் முக்கிய பாகம் எழுதும் நிப்பு ஆகும். பேனாவிற்கு பார்கர், பிரில் என்று எத்தனையோ விதவிதமான மை கூடுகள் இருகிறது. இந்த பேனா நிப்பு விருது நகர் மாவட்டம் சாத்தூரில் சுதந்திரம் அடைவதற்கு முன்பே குடிசை தொழிலாக செய்ய தொடங்கினர். சாத்தூரில் 250 நிப்பு தொழிற்சாலைகள் இருந்தன. இதில் 2500 பேர் நிப்பு செய்யும் தொழிலில் ஈடுப்பட்டனர். இந்தியாவில் சாத்தூரில் மட்டும் தான் இந்த நிப்பு தொழிற்சாலை இருந்தது. 1960ல் மானியம் தரப்பட்டது. அமெரிக்கா, ரஷ்ய, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து எவர் சில்வர் சீட்கள் வாங்க பட்டு நிப்புகள் செய்யப்பட்டன. 1970ல் இந்த மானியம் நிறுத்தப்பட்டது. 1983லிருந்து லெட், பால்பாயிண்ட் பேனாவின் வருகையால் நிப்பு பேனாவின் பயன்பாடுகள் குறைந்தது. ஒரு காலத்தில் கல்லூரியிலும், அலுவலகங்களிலும் நிப்பு பேனா பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறைகள் இருந்தது. பின்பு தளர்த்தப்பட்டது. இப்போது சாத்தூரில் வெறும் 3 தொழிற்சாலைகள் தான் இயங்குகிறது. இந்த நிப்பு 25 பைசா தற்போது விற்றால் வெறும் 5 பைசா மட்டும்தான் லாபம் கிடைக்கும். 10 பேர் வேலை செய்தால் சுமார் 6000 நிப்புகள் வரை ஒரு நாளைக்கு தயாரிக்கலாம். இவர்களுக்கு வேண்டிய சம்பளம் கொடுப்பதற்கும் நிப்புக்கு வேண்டிய பொருள் வாங்குவதற்கும் கட்டுபடியும் ஆகவில்லை. இங்க பேனாவிற்கு சந்தையில் பெரிய வியாபாரம் இல்லாத காரணத்தினால் இத்தொழில் நின்று விட்டது. ஆனாலும் சாத்தூரில் நடந்த நிப்பு தொழில் யாராலும் மறக்கமுடியாது. சாத்தூரில் இப்போது உள்ள எச்சம் வெள்ளரிக்காய், சேவு, மிளகாய், கரிசல் இலக்கியம் மட்டுமே.

No comments:

Post a Comment

*Life is all about living in peace*.

*Life is all about living in peace*.Life is not about  ups and down, right and wrong, success and failure. Know that failure simply states t...