Thursday, February 19, 2015

இந்திய தேர்தல் வரலாறு - ஆர்.முத்துக்குமார்




அன்புக்குரிய நண்பர் ஆர்.முத்துக்குமார் சமீபத்தில் 
எழுதி வெளியிட்டுள்ள “இந்திய தேர்தல் வரலாறு “ நூல் படித்துமுடித்தேன் மிக அற்புதமான பதிப்பு.

அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டும் வேளையில், இந்தியாவின் வளர்ச்சிக்கும், அவர்கள் செய்த பங்களிப்பும் சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
1951 ஜவஹர்லால்நேரு காலத்திலிருந்து 2015 நரேந்திரமோடி வரைக்குமான தேர்தல் வரலாற்றை நம் கண்முன் நி
றுத்துகிறார் ஆர்.முத்துக்குமார்.

அரிய புகைப்படங்கள், முக்கியமான செய்தித் தொகுப்பு என்ற வகையில் தேசிய, தமிழக தேர்தல்களின் வரலாற்றை 600 பக்கங்களுக்குள் எளிமையாகவும், முழுமையாகவும் நிறைவான நூலாகச் செய்துள்ளார். சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் இந்நூலை அற்புதமாக வெளியிட்டுள்ளது. சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்ம் மற்றும் திரு. ஆர்.முத்துக்குமாருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்


 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...