Saturday, February 14, 2015

இலங்கையில் மலையகத் தமிழர்கள்



க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும், திரு.மு.நித்தியானந்தன் எழுதிய  “கூலித்தமிழ்” படைப்பினை படித்தேன்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவழியினரைப் பற்றிய நல்லபதிவு.

இந்நூலில் அம்மக்கள்பட்ட துயரங்களையும், ரணங்களையும் நூலாசிரியர் விவரித்துச் சொல்லி இருக்கிறார். மதுரையிலிருந்து வெளிவந்த தமிழ்நாடு ஏட்டின் நிறுவனர் கருமுத்து தியாகராஜ செட்டியார் இம்மக்கள் படும் வேதனைகளைக் கண்டு அந்நாளிலே அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் பதிவாக்கப் பட்டிருக்கிறது.

சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் செய்துகொண்டு கடந்த 2014ம் ஆண்டோடு ஐம்பதாண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி  இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின்  நிலை பற்றிய
எனது கட்டுரை தினமணி இதழில் 31 அக்டோபர் 2014
தலையங்கப் பக்கத்தில் வெளிவந்தது.

அதில் நான் எழுதிய செய்திகளைவிட  அதிகமாக
இந்நூலில்  வரலாற்றுரீதியாக தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.மு.நித்தியானந்தனுக்கு  என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(எனது தினமணி கட்டுரை : http://goo.gl/JhmdU4 )

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...