Monday, February 23, 2015

தூத்துக்குடியை ஸ்மார்ட் சிட்டியாக அமைக்கத் திட்டம்.




தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் என்று நாட்டில் மொத்தம் 12துறைமுகங்கள் ஸ்மார்ட் சிட்டியாகின்றது.
முதல்கட்டமாக, இந்த திட்டத்துக்கு 7,060கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட மொத்த ஒதுக்கீடு 50ஆயிரம் கோடிகளுக்கு மேலாகும்.

ஒரு நகரத்திற்கு 4,000கோடி வீதம் ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நகரம் அமைந்தால், சிறப்பு பொருளாதார மண்டலம், கப்பல்கட்டும் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் மையங்கள் உருவாக்கப்படும்.

துறைமுகங்களில் உள்ள தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகள் பயோ கேஸ் (Bio-Gas)ஆக மாற்றப்படும். ஸ்மார்ட் சிட்டிகளும், துறைமுகங்களும் மின் ஆளுமை நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டிகளுக்குத் தேவையான மின்சாரம் காற்றாலைகள் மூலமாகவும், சூரியசக்தியின் மூலமாகவும் உற்பத்தி செய்யப்படும்.

அகலமான சாலைகள், வாகனங்களுக்கு பயோ கேஸ்-பேட்டரி எரிசக்தி மூலம் இயக்கப்படும். பசுமைஎரிசக்தி உருவாக்கப்பட்டு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமைநகரங்களாக இருக்கும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

கண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி, மர்மகோவா. புது மங்களூரு, கொச்சி, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பிரதீப், கோல்கட்டா ஆகிய 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப் படப்போகும் நகரங்களாகும்.


கடந்த 11-02-2015 அன்று தூத்துக்குடியா? சாம்பல் படியும் சாம்பல்குடியா? என்ற பதிவில் தூத்துக்குடி நகரத்தின் மாசுகளையும் தூசிக்கழிவுகளையும் வெளிப்படுத்துகின்ற தொழிற்சாலைகள் அமைந்துவிட்டன என்று கவலையான செய்திகளைத் தொகுத்து பதிவிட்டிருந்தேன்.

ஆனால் இன்றைக்கு தூத்துக்குடி ஸ்மார்ட்நகரங்களில் ஒன்றாக மாற்றமடையப் போவதாக அறிவிப்பு வந்திருக்கின்றது. அத்தோடு, தூத்துக்குடியினை பாதிக்கும் மாசுகளையும் , நகரத்தின் மேல்படியும் சாம்பலையும் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

ரஷ்யாவின் முயற்சியில் தூத்துக்குடி துறைமுகப் பணிகள் நேருகாலத்தில் நடைபெற்றன. அன்றையிலிருந்து தூத்துக்குடி நகர வளர்ச்சிப் பணிகள் யாவும் ஆமைவேகத்திலே நடைபெற்று வருகின்றன. இவையும் கவனிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*Life is all about living in peace*.

*Life is all about living in peace*.Life is not about  ups and down, right and wrong, success and failure. Know that failure simply states t...