Wednesday, February 11, 2015

முத்துக்குளிக்கும் தூத்துக்குடி






                    இயற்கையோடு மானிடம் போராட முடியுமா?
  முத்துக்குளிக்கும் தூத்துக்குடியா? சாம்பல் படியும் சாம்பல்குடியா?


தெற்குச் சீமையில் முத்துக் குளிக்கும் தூத்துக்குடி
சாம்பல் தூசிகளில் பாதிக்கப்பட்டுவருகிறது. அனல்மின்நிலையங்களும், ஸ்டெர்லைட் போன்ற காற்றை நஞ்சாக்குகின்ற அபாயகரமான தொழிற்சாலைகளும் தூத்துகுடியின் சுற்றுச் சூழலை பாதிக்கின்றது.  இதனால் புற்றுநோய் ,காசநோய், சுவாசநோய்கள் தோல்நோய்கள் ஏற்படுகின்றது.

ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும்  அனல்மின் நிலையம் 600 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு 14240டன் நிலக்கரியினை நாளொன்றுக்குப் பயன்படுத்தி அத்தோடு 2,952,000 கியூபிக் மீட்டர் தண்ணீரை பயன்படுத்துவதால் 5024டன் எடைகொண்ட சாம்பல் தினமும் கழிவாக வெளியேற்றப்பட்டு சூழல் மாசுபடுகின்றது.

தூத்துக்குடியா? சாம்பல் படியும் சாம்பல்குடியா?


அதுமட்டுமில்லாமல் பாதரசத்தின் வெளியீட்டால் தாவரங்கள் விலங்கினங்கள், கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. கீழ அரசரடி, அய்யனார்புரம், பட்டிணமருதூர் , தருவைகுளம், முத்தையாபுரம், முள்ளக்காடு என வடக்கே தருவைக்குளத்திலிருந்து தெற்கே ஆத்தூர் வரைக்கும் இதன் பாதிப்பு இருக்கின்றது.

அனல்மின் நிலையத்திற்காக நிலக்கரி 55லட்சம் டன் தூத்துக்குடிக்கு இதற்காக கொண்டு வரப்படுகின்றது. 1கோடி டன் வரை லாரியில் வந்துசேர்வதால் அவை வழிப்பாதைகளில் தரையில் சிதறி விவசாய மண் நாசமடைகிறது. இதுவுமல்லாமல் சல்பர் ஆக்ஸைடு இந்தியாவில் வேகமாக பரவும் நகரங்களில் எட்டாவது நகரம் தூத்துக்குடி ஆகும். ஏற்கனவே தாரங்கதாரா ஆலையும் ஆறுமுகநேரி முதல் திருச்செந்தூர்வரை மாசை ஏற்படுத்துகின்றது. மன்னார் வளைகுடா கிழக்கு கடற்கரை தென்பகுதியில் கடல் வளமும் மீன்பிடித் தொழிலும் மேலும் மாசு பரவப்பரவ பாதிப்புக்குள்ளாகும்.



















இயற்கையோடு மானிடம் ஓரளவுதான் போராட முடியும். அதற்கு மேல் போனால் சுனாமி போன்ற பயங்கரவிளைவுகளை மனித இனம் சந்திக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். வளர்ச்சியும் வேண்டும்,
வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டு ஒரே இடத்தில் தொழிற்சாலைகளை அமைத்து சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு  மனித இனம், இயற்கை வளங்களும்  விரைவாக அழிவதினை தொடரலாமா? வணிக நகரமான தூத்துக்குடியை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு வரவேண்டாமா?.



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment