West Bengal chief minister Mamata
Banerjee assures Bangladesh’s Prime minister Sheikh Hasina of playing a
positive role so that Dhaka and New Delhi could sign a deal for sharing the
water of river Teesta and also border issues at the earliest.
மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி பங்களாதேஷ் சென்று,
அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவைச் சந்திந்து, நதிநீர்ப் பிரச்சனைகள், எல்லைப்
பிரச்சனைகள் ஆகியவற்றிற்குத் தீர்வுகாண வேண்டுமென்று ஒரு மாநில முதல்வர் என்ற
நிலையில் பேசியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
பன்மையில் ஒருமை என்ற நிலையில் இந்தியாவின் சமஸ்டி
அமைப்புக்கு, பலம் சேர்க்கும் இந்த நடவடிக்கையை நாம் பாராட்டவேண்டும்.
இந்தப்பிரச்சனைகளில் இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இணக்கமான நிலை ஏற்பட்டு
சுமூக முடிவுகள் எடுக்கப்பட இந்திய அரசும் முயல வேண்டும். ஏற்கனவே நதிநீர்ப்
பிரச்சனைகளில் ஐ.நா மன்றம் தலையிட்டு இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும்
கங்கைநதிப் பிரச்சனையில் தீர்வு காணப்பட்ட்து.
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள
ஆரோக்கியமான ஜனநாயகம் இந்தியாவில் எப்போதும் பீடுநடை போடுகின்றது. அதற்கு மேலும்
வலுசேர்க்க மாநில முதல்வர்கள், தங்கள் மாநிலங்களுக்கு அண்டைநாடுகளோடு பிரச்சனைகள் இருந்தால் பேசித்தீர்ப்பதென்பது
நல்ல முயற்சிதான்.
தமிழகத்திற்கும் இலங்கையோடு மீனவர் பிரச்சனை, ஈழத்தமிழர்
மற்றும் அகதிகள் பிரச்சனைகள் உள்ளன.
மத்திய அரசின் முன்னிலையோடு இதையெல்லாம் மாநில அரசும் கவனிக்கலாம்.
கேரள முதல்வர் வளைகுடா நாட்டில் பணிசெய்யும் மலையாளிகள்
நலன்காக்க வளைகுடா நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அரசுகளுடன் கடந்த காலத்தில் அவர்களுடைய
பிரச்சனைகள் குறித்துப் பேசியதுண்டு.
சமஸ்டி அமைப்பில் இது ஒரு நல்ல துவக்கம்.
No comments:
Post a Comment