Friday, February 13, 2015

50 ஆண்டுகளுக்கு முன் மொழிப்போராட்டமும் டெல்லிதர்பாரும்...




இன்றைக்கு ஆங்கில இந்துபத்திரிக்கையில், வெளியாகியிருக்கும் பதிவு ஒன்று கவனத்தை ஈர்தத்து. 1965ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு மாணவர்போராட்டம் உலகநாடுகளையே திரும்பிப் பார்க்கவைத்தது. இப்போராட்டத்தில் பலர் தங்களுடைய இன்னுயிரை ஈந்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சிவகங்கை.ராஜேந்திரனைப் போல பலர் தங்களுடைய தேகத்தை தீக்கிரையாக்கினர். 1937லே இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் துவங்கியிருந்த்து என்பதெல்லாம் நெடிய வரலாறு.

1965ல் மலபார் காவல்துறையினரை வரவைத்து தடியடிகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடந்தேறியது. பொள்ளாசியில் மட்டும் நூற்றுக்கணக்கான தமிழ் சகோதர்ர்கள் சாகடிக்கப்பட்டு, ஒரே இட்த்தில் எரியூட்டப்பட்ட்து என்பது கொடுமையிலும் கொடுமை. அன்றைக்கு தில்லி தர்பாரை இந்தப் போராட்டம் அசைத்துக் காட்டியது.

இதற்காக அன்றையகாலகட்டத்தில்  பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி அமைச்சரவை அவசரக்கூட்டத்தினை தினமும் கூட்டினார்.
அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியமும், ஓ.வி. அழகேசனும், தமிழகத்தில் நடந்த சம்பவங்களுக்காக பதவியும் விலகினர். இந்து நாளேடு இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற அப்போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் சாஸ்த்ரியின் நடவடிக்கைகளைப் பற்றிய செய்தியினை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி புகைப்படத்தில்...



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment