Wednesday, February 11, 2015

தமிழ் இந்தியா டுடே நிற்கப் போகிறதா?




தமிழ் இந்தியா டுடே இதழ் நிறுத்தப்படுகின்ற செய்தி கவலை தருகின்றது. ஆரம்பகட்டத்தில் மாலன், வாஸந்தி அவர்களை எல்லாம் ஆசிரியர்களாகக் கொண்டு தமிழ் இந்தியா டுடே கிட்டத்தட்ட 25ஆண்டுகள் வரை வெளிவந்து கொண்டிருக்கின்றது என்று அறிகின்றேன்.

பிராகஷ். எம். சாமி, எல்.ஆர்.ஜெகதீசன் போன்ற நண்பர்களெல்லாம் ஆரம்ப காலத்தில் செய்தியாளர்களாக பணியாற்றிய  ஏடாகும். இதன் அலுவலகம் துவக்கத்தில்  இராதாகிருஷ்ணன் சாலையில், எல்லோ பேஜஸ்-க்கு எதிர்புறம் இருந்தது. பின் அண்ணா சாலையின் குணா காம்ப்ளெக்ஸ்க்கு மாற்றப்பட்டு, கவிதா முரளிதரண் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இப்போது வெளிவருகின்றது.

வாஸந்தி அவர்கள் காலத்தில் ஆண்டுக்கொருமுறை இந்தியா டுடேவில் தமிழ் இலக்கிய மலர்கள் அற்புதமாக வெளிவந்தன. அவற்றை இன்றைக்கும் பாதுகாத்து வைத்துள்ளேன். வாஸந்தி அவர்கள் காலத்திற்குப் பின்,  இலக்கிய மலர்கள் வரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த இதழ்களில் விருந்தினர் பக்கத்தில் கட்டுரைகள் எழுதியவன் என்ற நிலையில் இந்த செய்தி வருத்தம்மடையச் செய்கிறது.

இந்தியா டுடேவின் செய்திகள் யாவும் உறுதிப்பாடும் உண்மையும் நிறைந்தது. இவ்வாறான நிலையில், தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட இதழ்களும் நிறுத்தப்படுகின்றது என்ற தகவல் வந்துள்ளன. வாஸந்தி அவர்கள்  “தன்னுடைய குழந்தைக்கு இந்த நிலையா” என்று முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.

எங்களைப் போல வாசகர்கள் இது நிஜமான தகவலாக இருக்கக்கூடாது என்றே எண்ணுகிறோம்.

No comments:

Post a Comment

*Life is all about living in peace*.

*Life is all about living in peace*.Life is not about  ups and down, right and wrong, success and failure. Know that failure simply states t...