டெல்லியில் உள்ள தாரியாகஞ்ச் அன்சாரி சாலைதான் நூல் பதிப்பகங்களுடைய தலைமை இடம். இந்தச் சாலைமுழுவதும் பல பதிப்பகங்கள் உள்ளன.
ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகங்கள். பாடப்புத்தகங்களில் புகழ்வாய்ந்த சுல்தான் சந்த் கம்பெனி, யு.பி.எஸ்.பி.டி போன்ற முக்கிய அனைத்து புத்தக பதிப்பகங்கள் இருக்கும் இடம் அன்சாரி சாலை.
புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம் சந்த் 1903 ஆம் ஆண்டில் காசியிலிருந்து வெளியான உருது மொழி இதழான “ஆவாஜ் கால்ஹ்” எனும் இதழில் தன் முதல் நாவலான “அஸ்ரர் - இ - மாவிட்” தொடராக எழுதினார்.
“படேகர் கி பேட்டி” என்னும் கதை “பிரேம்சந்த்” எனும் புனைப்பெயருடன் வெளியானது. 1908 ஆம் ஆண்டில் இவரது முதல் கதைத்தொகுப்பு வெளியானாது.
1922 ஆம் ஆண்டில் “மரியாதா” என்னும் இதழின் செயல் ஆசிரியராகவும், 1926 ஆம் ஆண்டில் “மாதுரி” எனும் இதழின் ஆசிரியராகவும் . 1930 ஆம் ஆண்டில் “ஹன்ஸ்” எனும் இதழைத் தொடங்கி வெளியிட்டார்.
“சேவாசதன்”, “பிரேம் பக்சி”, “ரங்பூமி”, “காயகல்ப்”, “சப்த்சுமன்”, “வர்தான்”, “நிர்மலா”, “பிரதிக்சா”, “காபான்”, “கோடன்”, “கர்மபூமி” எனும் நாவல்களை எழுதியிருக்கிறார். இது தவிர முன்னூறுக்கும் அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். இவரது “ரங்பூமி” நாவல் வெளியானதும் மற்றொரு வங்கமொழி நாவலாசிரியரான சரத் சந்த்ரா இவரை “உபன்யாஸ் சாம்ராட்” என்று வாழ்த்தினார்.
இவரது ஹன்ஸ் இதழை திரும்பவும் 1980லிருந்து ராஜேந்திர யாதவ் பொறுப்பெடுத்து அன்சாரி சாலையில் இருந்து வெளியிடுகின்றார். நேற்றைக்கு அன்சாரி சாலைக்கு சென்றுவிட்டு சிலநேரம் அவர்களோடு பேசிவிட்டு வந்தேன். சென்னை பிராட்வே எப்படி இருக்குமோ அதுபோல இங்கும் சப்தங்களும், வாகன நெரிசல்களும் ஏற்பட்டுவிட்டது.
ஷீலா தீட்சத் முதல்வராக இருந்தபோது பதிப்பகங்களுக்குத் தனியாக பெரிய கட்டிடம் ஒன்று கட்டித்தருவதாக உறுதிகொடுத்தது இதுவரையிலும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று பதிப்பக உரிமையாளர்களின் கவலையாக உள்ளது. 1960-70-80களில் புத்தக விரும்பிகளும் வாசிப்பாளர்களும் நிறைந்து காணப்பட்ட இந்த இடத்தில் இந்நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து அதிகமாக இங்கு வருவதில்லை.
18ம் நூற்றாண்டின் இறுதியில் பழைய தில்லியின் அன்சாரி சாலை என்றால் அச்சகங்களும், புத்தக வெளியீட்டாளர்களும் தான் என்ற அடையாளம் இன்று வரை நீடித்துவருகின்றது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-09-2015
#AnsariRoad #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment