Sunday, September 20, 2015

வீரபாண்டிய கட்டபொம்மன்.

புதன் 3
இன்றைய தினம் புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமானின் சூழ்ச்சியினால் விருந்துக்கு அழைக்கப்பட்டு வீரபாண்டிய கட்டபொம்மனும் அவருடன் சேர்த்து ஆறுபேரும் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்ட தினம் .

வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட பின் வீரபாண்டிய கட்டபொம்மன் தன் கோட்டையை விட்டு வெளியேறி காட்டில் ஒளிந்திருந்தார். இதனை அறிந்த புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான், தன் தளபதி முத்துவைர அம்பலக்காரன் மூலம் அவரை விருந்துக்கு அழைத்து, அடைக்கலம் அளிப்பதுபோல் நாடகமாடி பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். பின் கட்டபொம்மன் உள்ளிட்டோர் செப்டம்பர் 29 1799 அன்று கயத்தாறுக்கு அழைத்துவரப்பட்டார்.

கயத்தாறுக்கு அழைத்துவரப்பட்ட கட்டபொம்மன் திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள கட்டிடத்தில் அடைத்துவைக்கப்பட்டார். இன்றைக்கு அந்த கட்டிடம் சிதிலமடைந்து கிடக்கிறது. அதை ஒரு நினைவுச்சின்னமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1759 –1807) விஜயரகுநாத தொண்டமான் என அறியப்படும் இவர் புதுக்கோட்டையை (1789-1807) ஆண்ட மன்னர்.
இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை என்று பெயர் கொடுத்தார் இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினார்.
சூழ்ச்சி விருந்து.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...