இன்றைக்கு டெல்லியில் (15-09-2015) சற்றுமுன்பு, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு அவர்களைச் சந்தித்து, வளைகுடாநாடுகளில் பணியாற்றும் தென் தமிழகத்தைச் சார்ந்தவர்களின் போக்குவரத்து வசதிக்காக துபாய், கத்தார், ரியாத், மஸ்கட், சவுதி, போன்ற பகுதிகளிலிருந்து மதுரை பன்னாட்டு விமானநிலையத்திற்கு நேரடியாக விமான சேவை வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் சந்தித்து விபரமாக சொன்னபோது, இதுபற்றி கவனிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
மலையாள லாபிகள் நிறைந்திருக்கும் நிலையில் ஓரளவு இந்த விஷயத்தை நேரடி கவனத்தில் கொண்டுவந்தது திருப்தியாக இருக்கின்றது. ஏற்கனவே இதுகுறித்து திரு.வெங்கட்ராமன் என்னிடம் கேட்டுக்கொண்டபடி விமானத்துறை அமைச்சர் பார்வைக்கு இந்த விடயத்தை அனுப்பியிருந்தேன்.
வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களிடம் இதுகுறித்தான கையொப்பமிடப்பட்ட மனு ஒன்று தயார்செய்யும்படி கேட்டிருந்தேன். அது என்ன நிலையில் இருக்கின்றது என்று தெரியவில்லை. இருப்பினும் கடமையாகக் கருதி
இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-09-2015.
Flights from Gulf to Madurai
Good efforts sir..If you need any help, Can contact me at mahemsmch@yahoo.in ! We are fighting for the same cause ! Let us join hands & work together !
ReplyDelete