இன்று மாலை டெல்லி புறப்பட்டு வருகிறேன் என்று ஓ.என்.ஜி.சியில் அதிகாரியாக இருக்கும் எனது நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் “மீத்தேன் எரிவாயு எடுக்க மீண்டும் அனுமதி கேட்டு குஜராத் நிறுவனம் ஒன்று கடந்தசில நாட்களாக முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.
நான், “மீத்தேன் இல்லை ஷேல் எரிவாயு எடுக்கப்போகிறார்கள் என்று மாற்றி அறிவித்தார்களே?” என்று கேட்டேன்.
“இல்லை சார், மீத்தேனுக்கும், ஷேல் எரிவாயுக்கும் சேர்த்துத்தான் முயற்சி நடக்கிறது. இரண்டுக்கும் பெரிதாக ஒன்றும் வித்யாசமில்லை.” என்று பதில்சொன்னார்.
கடந்த 31-03-2015 அன்று ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்ரேஷனுடைய கடிதத்தை மே மாதம் 8ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அந்த அமைச்சகம் கடந்த ஜூன் 3ம் தேதி அந்த கடிதத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.
இதற்கான கோப்புகளிண் பரிசீலனைப் பணிகள் வேகமாக நடக்கின்றது என்றும், 11-03-2015அன்று தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்ரேஷன் நிறுவனத்தின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக ரத்துசெய்யப் படாததால் திரும்பவும் அந்த நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்யப்படுகிறது.
காவிரி டெல்டாவை பாழ்படுத்தும் மக்கள் விரோதத் திட்டத்தை ஏனோ மத்திய அரசு வீண்பிடிவாதம் பிடித்துக்கொண்டு நிறைவேற்றத்துடிக்கிறதோ. தஞ்சைவிவசாயிகளின் கோபக்கனல் இந்த அரசை நிச்சயமாகச் சுட்டெரிக்கும். மாநில அரசும் வாய்மூடி மௌனியாக நிற்பது கண்டனத்துக்குரியது.
“அவரவருக்கு ஆயிரத்தெட்டு வேலை, பெருச்சாளிக்கோ மண்ணைப் பறிக்கும் வேலை” என்னும் தென்குமரி மண்ணின் சொலவடைதான் நினைவுக்கு வருகின்றது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-09-2015.
#KsRadhakrishnan
#KSR_Posts
#CauveryDelta #CoalBed #MethaneProject .
#ShaleGas
See also :
http://ksr1956blog.blogspot.in/2015/08/shale-gas.html
http://ksr1956blog.blogspot.in/2015/08/shale-gas-projects.html
http://ksr1956blog.blogspot.in/2015/08/shale-gas-and-coal-bed-methane-in.html
No comments:
Post a Comment