Tuesday, September 15, 2015

அழிவின் விளிம்பில் சென்னை ஏரிகள் - Lakes in Chennai



சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் நாளுக்குநாள் தன் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டே செல்கின்றன. ஒருபக்கம் ஆக்கிரமிப்புகள், மறுபக்கம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் இந்த நீர் ஆதாரங்கள் அழிவைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

தமிழக அரசு, 2002ல் வேளச்சேரி மேடவாக்கம் சாலையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை ஏரியை வனத்துறைமூலமாக பராமரிக்கும் திட்டத்திற்காககவும், அப்பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவும் 15கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதற்காக  மாநகராட்சியிடம் 420 ஏக்கர் நிலங்களும்,  வருவாய்த்துறை மற்றும்  பிற துறைகளிடம் இருந்து, 780 ஏக்கர் நிலத்தை பெறுவதற்கான நடவடிக்கைகள் கோப்புகளில் தூங்கிவழிகின்றன.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் நீராதாரமாக உள்ள, 31 ஏரிகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளால் சீர்கெட்டுவருகின்றன.  அவற்றை பாதுகாத்து, மேம்படுத்துவதற்கான ஆய்வுகளை வனத்துறை, பொதுப்பணி துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இதுகுறித்தான அறிக்கையை வனத்துறையினரிடம் வழங்கியுள்ளார்கள்.

வேளச்சேரி ஏரி, நங்கநல்லுார் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, உள்ளகரம் ஏரி, புழுதிவாக்கம் ஏரி, திரிசூலம் ஏரி, மீனம்பாக்கம் ஏரி, மூவரசம்பட்டு ஏரி, மடிப்பாக்கம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, நன்மங்கலம் ஏரி, அஸ்தினாபுரம் ஏரி, நெமிலிச்சேரி ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, கோவிலம்பாக்கம் தாங்கல், நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை அணை ஏரி, பள்ளிக்கரணை சித்தேரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மேடவாக்கம் ஏரி, ஜல்லடியன்பேட்டை ஏரி, பெரும்பாக்கம் ஏரி, அரசன்கழனி ஏரி, அரசன்கழனி தாங்கல், சித்தாலப்பாக்கம் ஏரி, சோழிங்கநல்லுார் ஏரி, சித்தேரி, ஒட்டியம்பாக்கம் ஏரி, நாவலுார் ஏரி, அகரம் தென் ஏரி போன்ற 31 நீர் ஆதாரங்களான ஏரிகளைக் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

1975ம் ஆண்டில் இருந்த ஏரிகளின் வரைபடத்தைக் கொண்டு பார்க்கும் போது இவற்றில் பெரும்பாலான ஏரிகள் 200ஏக்கர் பரப்பளவு கொண்டவை. ஆனால் இன்றைக்கு 50ஏக்கர் அளவில் சுருங்கிவிட்டன.

இவற்றில் பெரும்பாலான ஏரிகளின் தண்ணீர் குடிநீருக்கு உகந்தவை. ஆனால் அடுக்குமாடிக்குடியிறுப்புகள் , நகரத்தின் கழிவுகள் போன்றவைகளால் இயற்கையின் அற்புதமான இயற்கை வளங்களை பாழாக்கும் செயல்கள்  களையெடுக்கப்பட வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-09-2015.

‪#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts‬ #LakesinChennai

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...