Monday, September 14, 2015

தேசிய நதிநீர் இணைப்பு - Water Resources in india



இன்று காலை (14-09-2015) டெல்லியில், நதிநீர் இணைப்புக்குழு சென்னைக்கு வருகைதந்து தேசிய நதிகளை இணைப்பதைக் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்க உள்ளதாக கேள்விப்பட்டேன். சரம்சக்திபவனில் அமைந்துள்ள நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு சென்றிருந்தபோது அங்கிருந்த அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

எனது தேசிய நதிநீர் இணைப்பு குறித்த வழக்கில் ஊச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தான மேல்நடவடிக்கைகள் என்ன என் று அறிந்துகொள்ள அங்கு சென்றபோது இந்த செய்தி கிட்டியது.

இந்த குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் கருத்துகளை அறிய இருப்பதை அறிந்து, இது ஒரு நல்ல துவக்கம் என்று மகிழ்ச்சியடைந்தேன்.

அந்த அமைச்சகத்தில் பெற்றசில குறிப்புகளில்... சீனாவி்ன் நதிநீர் இணைப்பு குறித்த சில தரவுகளைப் பெறமுடிந்தது.

* கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சீனாவில் 1,20,000 கி.மீ தொலைவுகளில் நாட்டின் முக்கிய நீர்வளங்களை இணைத்து நீர்வழிச்சாலை உருவாக்கியிருக்கிறார்கள்.

உள்நாட்டுப்போக்குவரத்து, சரக்கு மரிமாற்றங்களுக்கு இந்த நீர்வழிச்சாலை பயன்படுத்தப்படுகிறது அதன் அளவீடு பயணிகள் : 10.73 billion persons/km. சரக்குப்போக்குவரத்து : 2,126.3 billion tons/km.
உலகின் மிகப்பெரிய நீர்மின்சக்தி உற்பத்தி நிலையத்தை உருவாக்கி இருக்கும் நாடு சீனா.

இண்ட்ஜியாவும் சீனாவும் கிட்டத்தட்ட சமகால அளவில்தான் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கின. இத்தனைக்கும் நீண்டகால உள்நாட்டுப்போர், 1937 முதல் 1945வரை ஜப்பானுடனான போர். போரில் கிடைத்த படுதோல்வி, புரட்சியில் இழந்த லட்சக்கணக்கான உயிர்கள் என்று சீனா சந்தித்த பாதிப்புகள் எண்ணிலடங்காதவை.

1948முதல் 1975வரை சீனா பெரிய அளவிளான முன்னேற்றங்கள் எதையும் கண்டிருக்கவில்லை.140கோடி மக்கள் தொகை கொண்டநாட்டில் 30சதவிகிதம்பேர் உடல் உழைப்ப்உக்குத் தகுதி இல்லாதவர்கள். 1978ல் சீனாவின் புதிய பொருளாதாரக் கொள்கை (socialism with Chinese characteristics) உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு உலகின் முதல் பொருளாதார சக்தியாக ( number 1 GDP nation ) உருவெடுத்து, ஏற்றுமதி வர்த்தக உலகத்தில் முதலிடம், பொருளாதார வளர்ச்சியில் முதலிடம், வாங்கும் சக்தி கொண்ட நாடுகளில் முதலிடம். உலக நாடுகளில், (அமெரிக்காவைத் தவிர) அதிக அளவில் அமெரிக்க டாலரை கையிருப்பு வைத்திருக்கும் ஒரே நாடு, அமெரிக்க பொருளாதாரத்தை அசைக்கும் அளவிற்கு வல்லமை கொண்ட ஒரு நாடு என்ற பெயர்களைத் தக்கவைத்திருக்கிறது.

உலகிலே அதிக அளவு படைவீரர்களைக் கொண்ட நாடு. ஐக்கிய நாடுகள் சபையில் (வீட்டோ அதிகாரம் கொண்ட) பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக உள்ள நாடு. உலகின் அதிவேக மற்றும் அதிக தூரத்திற்கு ஓடும் புல்லெட் ரெயில். உலகின் 3 மிகப்பெரிய, மிக நீளமான மேம்பாலங்கள். உலகில் அதிகபட்ச தூரத்திற்கு உள்நாட்டு நீர்வழிப்பாதையையும், அதில் போக்குவரத்தையும் உருவாக்கி இருக்கும் நாடு. உலகில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு. பாதுகாப்புத் துறையிலும், ராணுவ சாதனங்களின் உற்பத்தியிலும் தன்நிறைவு பெற்ற நாடு.
1990ல் இருந்து 2010 வரையுள்ள காலத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு சராசரி GDPயை -11 % க்கு தக்க வைத்துக்கொண்ட நாடு. இந்த பெயர்களை எல்லாம் சாதித்திருக்கிறது.

1970களின் இறுதிப் பகுதியில், டெங் ஜியோபிங் (Deng Xiaoping ) அதிகாரப் பொறுப்பேற்ற பிறகு, சீனாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார்கள். இன்று – உலகில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் விரும்பும் நாடுகளில் 3வது நாடாக சீனா திகழ்கிறது. 2010ஆம் ஆண்டில் மட்டும் சீனாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட பயணிகள் எண்ணிக்கை மட்டும் 54.7 மில்லியன்.
இத்தனையும் சீனாவால் சாதிக்கமுடிந்தபோது இந்தியாவால் மட்டும் ஏன் முடியாமது போனது...?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-09-2015.
#KsRadhakrishnan
#KSR_Posts
#WaterResourcesinIndia

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...