Friday, September 4, 2015

சீனாவின் பொருளாதர சரிவு


முன்னேறி வருகின்ற சீனா என்று கருத பட்ட ,அந்த நாட்டில் பெரிய பொருளாதர சரிவு ஏற்பட்டுள்ளது,பொருட்களை மிகவும் மலிவான விலையில் உலக சந்தையில் விற்ற சீனாவின் பொருளாதாரம் ஏற்றம் கண்டது. இப்போது சீனாவில் பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது,வணிக ரீதியாக உற்பத்திகேற்ற பண வரவுகள் வந்து சேர வில்லை. “பங்கை சீன வாங்க ஆரபித்தது.அதன் மதிப்பு சுமார் 10 டிரில்லியன் அமெரிக்கா டாலர் (1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி;1 டாலர் =ரூ 63.இந்தியா வின் மொத்த பொருளாதரம்-அமெரிக்க டாலரில் 2 டிரில்லியன்.அதாவது சுமார் ரூ.126 லட்சம் கோடி.சீனாவின் மொத்த பொருளாதரம் சுமார் ரூ.600 லட்சம் கோடி)

இங்கு பங்கு வர்த்தகப் பணத்தைக் கைவசம் வைத்துள்ள சீனா, ’நாங்கள் கிழிந்த கோட்டை இனி மேலைநாடுகள் தாண்டக் கூடாது’என்று நிபந்தனை விதிக்க ஆரம்பித்தது. இதனால் தன் தலையிலே மண்னை போட்டுக் கொண்டது. சுமார் 2 வருடங்களாகி விட்டன.தொலைத் தொடர்பு பொருட்களின் ஏற்றுமதியில் சலுகை காண்பித்து,அதன் மூலம் திரட்டிய வியாபார ரகசியங்களைப் பயன்படுத்தி பல நாடுகளுக்கு அரசியல்,பொருளாதார,சமூக,ராணுவ நெருக்கடிகளை சீனா உருவாக்கி வருகிறது.சமீபத்தில்,பல அமெரிக்க ராணுவ ரகசியங்களை சீனர்கள் களவாடியதாக எழுந்த குற்றச்சாட்டு ஒரு பிரச்சனையாக எழுந்தது

சீனாவின் டியாஜென்,துறைமுக நகரில் ஏற்ப்பட்ட தீ விபத்தால் பெரும் இழப்பு ஏற்பட்டது
இப்படி பல சிக்கல்களால் சீனாவின்முன்னேற்றம் தடைபட்டு பொருளாரத்திலும் கடந்த சில நாட்களாக பின்னடைவுக்கு தள்ளபட்டது

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-09-2015.

#China
‪#‎KsRadhakrishnan‬
‪#‎KSR_Posts‬

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...