கிளியோபாட்ரா தன் 18வது வயதில் எகிப்து ராணியாக முடிசூட்டப்பட்டார். அக்காலத்தைய எகிப்திய மரபின்படி, தன் தம்பியை மணம்முடித்து அவர் ஆட்சியிலமர்ந்தார். அதன்பிறகு அண்டை நாடான கிரேக்கத்தின் அரசர் சீசரை தன் காதல்வலையில் வீழ்த்தினார்.
கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் நாட்டுநலனைக் கவனிக்காமல் போகவே, ஒரு மங்கையின் அழகில் அரசர் மயங்கிக் கிடக்கிறார் என்று கிளர்ச்சியாளர்கள் அவரை ஆட்சியிலிருந்து விலக்க முயன்றார்கள். சீசரின் உற்ற நண்பனான புரூட்டஸை வைத்தே அவரைக் கொலைசெய்யப்பட்டார்.
சீசர் இறந்ததும் எகிப்து திரும்பினவர் மீண்டும் கிரேக்கத்தில் அரச பதவியைக் கைப்பற்றிய மார்க் ஆண்டனியை காதலிக்கத் தொடங்கினார்.
பின் சீசரின் மகனான அகஸ்டஸ் கிரேக்கத்தைக் கைப்பற்ற, போரில் தோல்வி அடைந்த மார்க்ஆண்டனி தன் காதலியான கிளியோபாட்ராவின் மடியிலே தற்கொலை செய்துகொண்டு உயிர்துறக்கிறார். அகஸ்டஸிடம் கைதியாக வாழ விரும்பாத கிளியோபாட்ரா கொடிய விஷ நாகத்தை தன்மீது கடிக்க விட்டு அதன் விஷ வீரியத்தில் உயிர்துறந்தார் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லும் கதை.
1963ம் ஆண்டு கிளியோபாட்ராவின் இந்த சரித்திரக்கதை திரைப்படமாக எடுக்கப்பட்டது. கொஞ்சமும் சமரசம் இல்லாமல் இரண்டு உலகநாடுகளின் வரலாற்றையும், அரசியலையும், அழிவையும், பெரும்பொருட்செலவில் படமாக்கியிருந்தது செஞ்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் பட நிறுவனம். 125மில்லியன் டாலர் தொகையில் இந்தப்படம் தாயாரிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்ற ஒரு முன்னுதாரணமாக இத்திரைப்படம் அமைந்தது.
அத்திரைப்படத்தில் கிளியோபாட்ரா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை எலிசபெத் டெய்லர். அவர் மார்க் ஆண்டணியாக நடித்த நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை காதலித்தார். பின்பு, ரிச்சர்ட் பர்ட்டன் உட்பட ஏழுபேரை மணம் முடித்து விவாகரத்தும் செய்தார். நிஜவாழ்விலும் கிளியோபாட்ராவின் கதாப்பாத்திரத்தை அப்படியேபிரதிபலித்தார் எலிசபெத். படத்தில் அரசர்களைக் காதலித்த அவர் நிஜவாழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரீகனுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
சிறுவயதுமுதலே திரைப்படங்கள் மீது ஈடுபாடுகொண்டிருந்த எலிசபெத் டெய்லர் தன் அழகை தானே ரசிக்கும் தன்மை கொண்டிருந்தார். எப்படி கிளியோபாட்ரா தன் மேனியை நிலைக்கண்ணாடி முன் ரசித்துக் கொண்டாடுவாரோ அதேப்போல எலிசபெத் தன் மேனியை நிர்வாணமாக கண்ணாடி முன் நின்று ரசித்தவர். மீன் துண்டுகளை விரும்பி விழுங்குவது அவரது வாடிக்கை. அதேப்போல ஆண்களையும் மயக்கி தனக்குள் விழச்செய்தவர்.
கிளியோபாட்ராவுக்கு 11 மொழிகள் தெரியும். கலை ஈடுபாடும். நுண்மான்நுலைபுலம் கொண்டவராகவும், துணிச்சலும் மிக்கவராகவும், தன் அழகைவிட பெரிய அதிகாரம் உலகில் இருகமுடியாது என்ற ஆணவத்தைக் கொண்டவராகவும் இருந்தார். இதே குணாதிசயம் ஒத்துப்போனவரான எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ரா கதாப்பாத்திரத்துக்கு மிகச்சரியாக பொருந்திப் போனார் என்றே சொல்லவேண்டும்.
கிரேக்கத்தலைநகர் ரோமுக்கு அதிகாரப்பூர்வ அரசியாக கிளியோபாட்ராவை அழைத்துவரும் ஒரு காட்சி இத்திரைப்படத்தில் பிரம்மாண்டமாகக் இடம்பெற்றிருக்கும். சீசரை மயக்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு எகிப்திய அரசியை தங்கள் ராணியாக ஏற்றுக்கொள்ள விரும்பாத ரோமானியர்கள் பெருந்திரளாகக் கூடியிருக்க, கிளியோபாட்ராவின் அழகில் வசப்பட்டு அவரைத் தங்கள் ராணியாக ஏற்கும் காட்சி பிரம்மிக்கத்தக்கது. கிளியோபாட்ராவின் அழகு எப்படி எகிப்திய- ரோமானிய அரசியலில் வீரியமிக்கதாக இருந்தது என்பது அதன்மூலம் உணர்த்தப்பட்டிருக்கும்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “யூடூ ப்ரூட்டஸ்” என்ற பிரசித்தி பெற்ற வசனம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் என்னும் உணர்ச்சிகரமான துன்பவியல் நாடகத்தில் இடம்பெற்று காவிய அந்தஸ்து பெற்றது.
கிளியோபாட்ரா நாகம் தீண்டி இறக்கவில்லை. விஷம் பாரித்த உடல் நீலம்பூத்து தன் அழகைக் கெடுத்துவிடும் என்பதால் எகிப்தில் உள்ள கொடிய விஷத்தாவரங்களை வரவழைத்து அதை அரைத்து குடித்தே தன்னை மாய்த்துக்கொண்டார் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ கடைசிவரை ஒரு ராணியாகவே வாழவிரும்பி, தன் அழகால் உலக சாம்ராஜ்யங்களையே ஆட்டிப்படைத்தார்.
கிளியோபாட்ரா ஒரு பெரும் ஆளுமையாக வாழ்ந்தார் என்று சரித்திரம் சொல்கின்றது. அதனால் என்ன பலன் மக்களுக்கு அப்போது கிட்டியது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்.
உண்மையான கிளியோபாட்ரா ஆனாலும் சரி; அவரது பாத்திரத்தில் நடித்த எலிசபெத் டெய்லரானாலும் சரி அவர்கள் இருவருமே தங்களுடைய சொந்த சுயநலனுக்காக வாழ்ந்தார்கள் என்று கருதாமல் அவர்களை ஒரு ஆளுமையாக கருதுவதை ஏற்றுக்கொள்ளமுடியாதது.
இது ஒரு பேசப்படவேண்டிய பொருள்தான் இல்லையென்று மறுக்கவில்லை. இதனால் வரலாற்றில் அரசியல், பொதுவாழ்வு எப்படியெல்லாம் பாழ்படுத்தப்பட்டது என்ற உண்மைகளை உணராமல் இந்தஇரண்டு நபர்களையும் பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களாக நினைப்பதுதான் வேதனையானது.
சரித்திரத்தில் எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் அழகில் மதிமயங்கி சரிந்த கதைகளும் உண்டு. அதை அப்படித்தான் பார்க்கவேண்டுமே ஒழிய அழகு = அரசியல் என்று பார்ப்பது ஒருகாலும் ஏற்றுகொள்ளமுடியாதது.
புதிய அரிச்சுவடியோ, சூத்திரமோ என்ற நிலையில்
அழகு= அரசியல்,
ஜாதி = அரசியல் ,
மதம் = அரசியல்,
கிரிமினல்கள் = அரசியல் ,
பணம் = அரசியல் ,
சுயநலம் = அரசியல்,
நேர்மை Vs அரசியல்
கொள்கை Vs அரசியல்
சேவை Vs அரசியல்
தகுதி Vs அரசியல்
இன்றைய அரசியல் இருக்கின்றது. இதற்கு கிளியோபாட்ரா ஒரு பாலபாடம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-09-2015.
No comments:
Post a Comment