Friday, September 11, 2015

ஈழத்தில் இனப்படுகொலை : கலாம் மக்ரே வின் இரண்டாவது ஆவணப்படம்.- Sri Lanka: The Search For Justice : Callum Macrae



இலங்கையி்ல் நடைபெற்ற இனப்படுகொலையின் போர்குற்ற காட்சிகளை சேனல்4 என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி உலகளவில் வெளியிட்டு பெரும் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.

அந்த ஆவணப்படத்தின் இயக்குனரான கலாம் மக்ரே தற்போது “இலங்கை: நீதிக்கான தேடல்” (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் மற்றொரு ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.

முப்பது வினாடிகள் கொண்ட இந்த ஆவணப்படம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ், சிங்களம், பிரெஞ்சு, இந்தி மொழிகளில் அடுத்துவரும் நாட்களில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்படு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும், மேலும் பல போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிவியா, பராகுவே, அர்ஜென்டைனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கல்லாம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டுக் காட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா.தலைமையகத்தில் இந்த ஆவணப்படத்தைத் திரையிடவும் அதன் இயக்குனர் கலாம் மக்ரே முயற்சித்து வருகின்றார். ஈழத்தமிழர்களுக்கான சர்வதேசத்தின் குரலாக இந்த ஆவணப்படமும் இருக்கும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-09-2015.

காணொளி இங்கே :





#KsRadhakrishnan
#KSR_Posts
#callumMacrae
#SrilankanTamils_Issue

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...