நாளை மறுநாள் புதன் கிழமை (15-09-2015) மதியம் 1மணிமுதல் 2மணிக்குள் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த ஐ.நா. அறிக்கை வெளியாகின்றது. குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள் என்ற நிலையில் தான் இந்த அறிக்கை இருக்கும் என்பது பலரது கருத்தாக இருக்க்கின்றது. உப்புச் சப்பில்லாத அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கான எந்த நியாங்களும் வெளிப்படுமா என்பது கேள்விக்குறி.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்திய மேக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின்
இடைக்கால அறிக்கையும், 2006ல் மூதூர் சர்வதேச ஊழியர்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டது, திரிகோணமலையில் 5மாணவர்கள் படுகொலை உள்ளிட்ட மீறல்கள் குறித்து விசாரித்த உடலகம ஆணைக்குழுவின்அறைக்கையும் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட உள்ளது.
காணாமல் போனவர்கள் பற்றிய மேஸ்வெல் அறிக்கை இலங்கை ஜனாதிபதியிடம் இரண்டு வாரங்கள் முன்பே அளிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு அறிக்கைகள் மூலம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க இலங்கை திட்டம் தீட்டிவருவதாகத் தெரிகிறது.
ராஜபக்ஷே அரசினால் நியமிக்கப்பட்ட நிசங்க உடலகம அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் இருந்தது. தற்போது அந்த அறிக்கையும் வெளியிடுவதற்குத் தயாராகியுள்ளது இலங்கை அரசாங்கம்.
தென் ஆப்பிரிக்காவை பின்பற்றி 'உண்மை, நீதி, நல்லிணக்கத்துக்கு' வழிகாணப்போவதாக ஊரை ஏமாற்றிவிட்டு போர்குற்றங்களை மூடி மறைக்கவும், அனைத்துத் தரப்பினரையும் சமாதானப்படுத்தவும் திட்டம் தீட்டியுள்ளது சிங்கள அதிகாரவர்க்கம்.
டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜே.என்.யு பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் இன்றைக்கு இதுபற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் ஒரு கருத்தைத் தெளிவாகச் சொன்னார்கள்.
“ ஈழப்பிரச்சனையினைகள் யாவும் சென்னைக்கு வடக்கேயும், மேற்குத் தொடர்ச்சிமலைக்கு மேற்கேயும் தாண்டிவிடாமல் தமிழகத்திலேயே அடக்கி வைத்துவிட்டீர்கள். அதுதான் ஈழப்பிரச்சனை குறித்து. இந்தியா முழுமைக்குமான விழிப்புணர்வு இல்லாமல் போய்விட்டது. அதற்கான முயற்சிகளை எடுக்க தமிழர்கள் தவறிவிட்டார்கள்” என்றார்கள்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-09-2015.
இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா இன்று ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் படித்த அறிக்கை படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
#SrilankaTamilsIssue
#KsRadhakrishnan
#KSR_Posts
No comments:
Post a Comment