Saturday, October 3, 2015

மந்த நிலையில் நெல்லைமாவட்ட நிர்வாகம்.







சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு அரங்கம் தி.மு.க. ஆட்சி காலத்தில் துணைமுதல்வராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் தான் ஆகின்றன. சில சமூகவிரோதிகள் அதனை இடித்து நாசம் செய்துள்ளனர்.

இதைக்குறித்து சகோதரி தமிழ்ச்செல்வி மற்றும் சமூக ஆர்வலர்கள் என்னுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ச.தங்கவேலுவும் நானும் கடந்த 02-08-2015 அன்று அக்கட்டிடத்தை நேரடியாக ஆய்வு செய்து நெல்லைமாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு திரு.ச.தங்கவேலு அவர்கள் விரிவான கடிதத்தையும் எழுதினார்கள். பலமுறை இதனை நினைவுபடுத்தியும் மாவட்டநிர்வாகம் பாராமுகமாக இருப்பதன் நோக்கம் புரியவில்லை.

தி.மு.க.ஆட்சியில் துவங்கப்பட்ட கட்டிடம் என்று கவனிக்கப்படாமல் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இருப்பினும் இதுகுறித்து மேல்நடவடிக்கை அரசுதரப்பில் எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கலாம் என்று நினைத்துள்ளோம்.

பள்ளிக்கட்டிடத்தை இடித்துத் தள்ளிய குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கக்கூட இந்த அரசுக்குத் துப்பில்லை. இது வெட்கப்படவேண்டிய விடயம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-10-2015.

#KSR_Posts
#KsRadhakrishnan
#Sankarankoil


No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...