Friday, October 23, 2015

விவசாயிகள் தற்கொலை



காணொளி 

ஆந்திராவில் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியானவிலை கிடைக்காமல், கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தமுடியாமல் , வதைபட்டி ரணங்களைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாகி விட்டது. அதைப்பற்றிய காணொளிப்பதிவு. ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை 26 % கூடுதலாகியிருப்பதாக, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் மோகன்பாய் குந்தாரியா ஒப்புக்கொண்டுள்ளார். இதை மக்களவையில் எழுப்பப்பட்டக் கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்..
நாடு முழுவதும் கடந்த 2014ம் ஆண்டு மட்டும் 1,109 விவசாயிகள், விவசாயம் பொய்த்துப் போய் கடன் தொல்லையால் செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 879ஆகவும், 2012ஆம் ஆண்டில் 1,046ஆகவும் இருந்தது.

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 2,568விவசாயிகளும், தெலங்கானாவில் 898 பேரும், மத்திய பிரதேசத்தில் 826பேரும், சட்டீஸ்கரில் 443 பேரும், கர்நாடகாவில் 321பேரும், ஆந்திராவில் 160 பேரும், கேரளாவில்107பேரும், தமிழ்நாட்டில் 68பேரும் , உத்திரபிரதேசத்தில் 63பேரும், குஜராத்தில் 45பேரும் தற்கொலை செய்துள்ளனர் என்று டெல்லியிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஏடு (நாள் 22-06-2015) தெரிவிக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டுமுதல் விவசாயிகள் தற்கொலை என்ற துக்கநிகழ்வு நடைபெறத் துவங்கியது.

“மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி” என்ற மருதகாசி அவர்களின் வரிகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமோ.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2015

‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ ‪#‎FarmersSuicide‬

See Also :

http://ksr1956blog.blogspot.in/2015/08/31-08-2015-farmers-suicide-list-in.html

http://ksr1956blog.blogspot.in/2015/05/blog-post_19.html

http://ksr1956blog.blogspot.in/2015/05/urid-dhall.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/blog-post_3.html

http://ksr1956blog.blogspot.in/2015/07/organic-farming.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/farmer-suicide.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/formers-suicide.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/land-acquisition4.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/old-farmers-almanac.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_39.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/get-out-from-agriculture-highly.html

http://ksr1956blog.blogspot.in/2015/07/farmer-agriculture-issue-radhakrishna.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/good-agricultural-practices-help-raise.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/today-youths-turn-back-to-natural.html


No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...