Wednesday, October 21, 2015

தென்பெண்ணை ஆறுமூலம் மாற்றுத்திட்டம் - Tamil Nadu Water Issues



ஆந்திர வனப்பகுதியும் அதையொட்டிய குப்பம் பகுதியிலிருந்து வரும் தண்ணீர் தமிழக எல்லைப்புறங்களில் உள்ள பகுதிகளில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நீர் காளிக்கோயில் வழியாக ஓதிக்குப்பத்திற்கு வந்து திருவள்ளூர் மாவட்டத்தின் பாசான வசதிக்குப் பயன்படுகின்றது. இந்த நீர் நிரம்பி வந்தால் ஊத்தங்கரை அருகே உள்ள பம்பாறு அணையைச் சென்றடையும். இந்தத் தண்ணீர் மூலம் பர்க்கூர், மத்தூர், ஊத்தங்கரை போன்ற பகுதிகளில் 25ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த பத்தாண்டுகளாக ஆந்திர வனப்பகுதியில் பல தடுப்பணைகள் கட்டப்படுவதால் மழைக்காலங்களில் நீர்வரத்துகள் நின்றுவிட்டன. தற்போது தென்பெண்ணை ஆற்று நீர் எண்ணேகொல்புதூரிலிருந்து படேதலாவ் வரை கொண்டுவரப்பட வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதனால் 40225ஏக்கர் நிலம் பயனடையும் 95 ஏரிகளுக்கு நீர்வரத்தும் வரும்.

இவ்வாறான நிலையில் ஆந்திர அரசு தடுப்பணைகளால் தமிழகத்துக்கு வரும் தண்ணீரைத் தடுத்துவிடுபதால் தென்பெண்ணை ஆறு மூலம் தண்ணீர் வழங்கவேண்டுமென்று திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இப்படி நதிநீர் ஆதாரப் பிரச்சனைகளில் ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற அண்டை மாநிலங்களோடு போராடிக் கொண்டிருப்பதுதான் தமிழ்நாட்டின் துரதிஷ்டமான சூழ்நிலையாகிவிட்டது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-10-2015

#PonnaiyarRiver#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...