Friday, October 23, 2015

விவசாயிகள் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு சிலைஅமைத்தல் - நதிநீர் இணைப்பு கருத்தரங்கம்.




நண்பர்களே!
வணக்கம், கோவில்பட்டியில் மறைந்த தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடு சிலைதிறப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இதைக்குறித்து உழவர் உழைப்பாளர் சங்கத்தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் இதுகுறித்து ஆர்வமாக இருக்கின்றார். நாராயணசாமி நாயுடு சிலையமைப்பில் அக்கறையுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டுகின்றேன்.


, நதிகளை தேசியமயமாக்கி, நதிநீர் இணைத்து, அச்சன்கோவில்-பம்பை நதிகளை தமிழக வைப்பாறோடு இணைத்தும், மேற்குநோக்கிப் பாயும் கேரள நதிகளைத் தமிழகத்துக்குத் திருப்பவும் தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தில் 30ஆண்டுகள் நடந்த எனது வழக்கி்ல் வழங்கப்பட்ட தீர்ப்பினை நடைமுறைப் படுத்தவும்; வானம்பார்த்த கரிசல்மண் பகுதிகள் பயனடையும் வகையில் சாத்தூர் அல்லது சிவகாசி, கோவில்பட்டி மற்றும் சங்கரன்கோயில் பகுதியில் இதுகுறித்தான கருத்தரங்கங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மறைந்த நாராயணசாமி சிலையமைப்பிலும், நதிநீர் இணைப்பில் அக்கறையும், ஆர்வமும், இதயசுத்தியோடும் உள்ள நண்பர்கள் தொடர்புகொண்டு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறேன்.

பல்வேறு விவசாய அமைப்புகளும் இதுகுறித்து தொடர்புகொண்டு தங்களுடைய ஆதரவையும் தெரிவித்துள்ளன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2015.

#விவசாயிகள்சங்கத்தலைவர்நாராயணசாமிநாயுடுசிலைஅமைத்தல், #நதிநீர்இணைப்புகருத்தரங்கம்

#KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…