Tuesday, October 20, 2015

ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்






 “காற்றினிலே பெரும் காற்றினிலே,
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்,
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்,
அக்கரையோ இக்கரையோ?
ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது,
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது,
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது,
ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ?”


....... இந்தப் பாட்டிற்கு விளக்கம் தேவை இல்லை.

போலிகளும், நடிப்புகளும் தான் நாட்டில் ஈடேறுகின்றன. போலிகளும் நடிப்புகளும் நாடக மேடையில் அரங்கேற்ற வேண்டியவை...  இங்கு வாழ்க்கையில் அரங்கேற்றப்படுகின்றன. உண்மைகள் உறங்குகின்றன. நியாயங்கள் நிராயுதபாணியாக நிற்கின்றன. விதியே விதியே என்செய்ய...

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-10-2015.

#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts‬

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...