இந்தியா-ஆப்ரிக்கா இடையையான உச்சி மாநாடு வரும் 26ம் தேதி தொடங்கி அடுத்துவரும் நான்கு நாட்கள் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இரு நாட்டு நட்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக பல நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.
இம்மாநாட்டில் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 54 நாடுகள் கலந்துகொள்கின்றன. அந்நாட்டு அதிபர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்று, தொழில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு கலாச்சாரம் கல்வி குறித்து பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
ஆப்பிரிக்காவில் குறிப்பாக சீனாவின் முதலீடுகள் அதிகம். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா பெருமளவில் அங்கு முதலீடு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தியாவின் முதலீடு இருக்குமென்று தெரிகிறது.
இந்தியாவிற்கு நைஜீரியா, அங்கோலா, எகிப்து, லிபியா, சூடான், அல்ஜீரியா, கயானா, காங்கோ, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றது.
சகாரா பாலைவனம் அதையொட்டிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 91.2 சதவிகித எண்ணெய் இந்தியா பெறுகின்றது. அதுமட்டுமில்லாமல், பாஸ்பேட், பாக்டைட், யுரேனியம், இரும்புத்தாது, பிளாட்டினம், குரோமியம், கோபால்ட், துத்தநாகம், தங்கம் மற்றும் வைரம் போன்றவையெல்லாம் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கின்றது.
ஆப்ரிக்காவில் தொழில்ரீதியாக உருவாக்கப்படுகின்ற பொருள்கள் கவர்ச்சித்தன்மையோ, திருப்தியாகவும் , முழுமை அடையாமலும் இருந்தது. சீனா நுழைந்த பிறகுதான் ஆப்ரிக்காவில் செய்யும் பொருட்களை ஓரளவு முழுமையாக விற்பனைக்குக் கொண்டுவர முடிந்தது. இல்லையென்றால் அவை யாவும் தாதுவடிவமாகவே இருந்திருக்கும்.
இந்தியாவில் உள்ள தனியார்கள் ஆப்ரிக்காவில் முதலீடு செய்யவும் இந்த மாநாடு வழிவகுக்கும்.
இந்தியா ஐநா மன்றத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக, ஆப்ரிக்காவைச் சேர்ந்த இந்த 54நாடுகளும் தங்கள் ஆதரவை வழங்கலாம் எதிர்காலத்தில். தற்போது ஆப்ரிக்காவில் இஸ்லாமிய பயங்கிரவாதிகளின் நடவடிக்கைகளால் அங்கு வர்த்தகமும், தொழில்களும் முடங்கிப்போயிருக்கின்றன.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். |24-10-2015
#KsRadhakrishnan #KSR_Posts
#Indo_Africa #summit
No comments:
Post a Comment