Friday, October 16, 2015

ஈழ தமிழர் -சர்வதேச விசாரணை- Srilankan Tamils

ஈழ தமிழர் -சர்வதேச விசாரணை- Srilankan Tamils
______________________________________________________________


தமிழ் வின் தளத்தில் , இலங்கையில் நடந்த ஈழபோரை குறித்து சர்வதேச விசாரணைதான் வேண்டும் என கனடா நாட்டு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் வலியுறுத்தியுள்ளார். 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கலப்பு விசாரணை முறையில் இலங்கை அரசும் சேர்ந்துதான் விசாரிக்கும். குற்றம் செய்த கொடுமைக்காரனே எப்படி விசாரிக்க வழக்கை விசாரிக்க முடியும்.  இந்திய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி 2006 ல் இலங்கை சென்று இந்த குற்றங்களை எல்லாம் விசாரித்து அறிக்கையும் தந்துள்ளார். 

கலப்பு விசாரணை முறை என்ற அறிவிப்பு வந்திருந்தாலாவது சற்று நிம்மதி ஏற்பட்டிருக்கும். கலப்பு விசாரணை முறை என்பது கம்போடியா,சியாரா லியோன் ,கிழக்கு திமோர் , சாட் போன்ற நாடுகளில் நடந்த குற்றங்களை விசாரிக்க உருவாக்கப்பட்டது. குறிப்பாக கிழக்கு தைமூர் நாட்டில் பாதிக்கப்பட்ட தைமூர் மக்கள் தங்களை பாதுகாத்துகொள்வதற்க்காக இவர்களை கொலை செய்த இந்தோனேஷியாவிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அம்மக்கள் தங்களை கொலை செய்யும் இந்தோனேசியா ராணுவத்திடம் இருந்து பாதுகாத்துக்கொண்ட பின்னரே இவ்விசாரணை நடத்தப்பட்டது .  


இப்படி பிரச்சனை இருக்கும் பொழுது இந்தியா , அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ததீர்மானத்தை முன்மொழிந்தது வெக்கக்கேடானது. தெற்கு சூடான் பிரியும்பொழுது அங்கு நடந்த இனபடுகொலையை விசாரிக்க வேண்டுமென்று ஐநா அறிவித்தது. அனால் இலங்கை பிரச்னையில் மட்டும் , ஐநாவுக்கு இன படுகொலை என சொல்ல மனம் வரவில்லை. காமன்வெல்த் நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றால் இன்றைக்கு காமன்வெல்த் அமைப்பை இலங்கைதான் தலைமை தாங்குகிறது , எப்படி சரியாக வரும் ??

எப்படியாவது சிங்கள அரசை காப்பாற்றவேண்டும் என்று உலகநாடுகள் நினைகின்றதேயொழிய , பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க இவர்களுக்கு மனம் ஒப்பவில்லையே. இந்நிலையில் கனடா நாட்டு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் சர்வதேச சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தியது வரவேற்க்கப்படவேண்டிய செய்தியாகும்.


னடா குடிவரவு குடியுரிமை அமைச்சரான கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் லங்காசிறி க்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்குமாயின் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில்  அஜெக்ஸ் பகுதியில் கொன்சர்வேடிவ் கட்சி்யில் போட்டியிடும் கிரிஸ் அலெக்ஸ்சாண்டர் மேலும் தெரிவிக்கையில்.

1. கனடாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினருக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்?
இந்த தேர்தலில் ஒட்டு மொத்த கனடியர்களின் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது பொருளாதாரத்தில் முன்னேற்றம் கொண்ட எதிர்காலம். கடுமையாக உழைப்பதால் மட்டுமே வளர்ச்சியை எட்ட முடியும். பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டவே கன்செர்வெடிவ் கட்சி முயற்சிகள் மேற்கொள்ளும். தொழில், சிறந்த வாழ்க்கை தரம், சிறப்பான வங்கிச் சேவை என்பன மட்டுமல்ல வரிச்சுமையை குறைப்பது போன்றவற்றில் கன்செர்வேடிவ் அரசு கவனம் செலுத்தும். கன்செர்வேடிவ் கட்சியால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.
2. சி.24 மற்றும் சி.51 சட்டங்கள் குறித்து இங்கு பரவலாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றன, இது குறித்து மேலும் பல தகவல்களை விளக்க முடியுமா?
கனடிய குடிமக்கள் அனைவரும் ஒரே ஒரு வகுப்பை சார்ந்தவர்கள்தான். கனடாவின் குற்றவியல் குறியீடுகளை பலப்படுத்தவும், சர்வதேச அளவில் கனடாவின் இடத்தை தக்கவைத்து கொள்ளவும், தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து கனடா குடிமக்களை பாதுகாக்கும் பொருட்டும் கன்செர்வேடிவ் அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். 2014-ம் ஆண்டு மட்டும் கனடாவில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் கனடாவில் புதிதாய் குடியேறியுள்ளனர். கனடாவில் குடியுரிமை பெறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளதே இதற்கு காரணம். கடந்த லிபரல் அரசின் ஆட்சியில் கனடாவில் பிறந்தவர்களுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையே பாகுபாடு ஏற்படுவது போன்ற நிலை உருவானது, ஆனால் இனிமேல் அது இருக்காது. கனடிய குடிமக்களுக்கு பாதுகாப்பும், சர்வதேச அளவில் கனடா பாதுகாப்பான நாடு என்பதை உறுதி செய்யவே சி.24 மற்றும் சி.51 மசோதாக்கள்.
3. உண்மை கண்டறியும் குழுவில் அங்கமாக நீங்கள் இலங்கையின் வட பகுதிக்கு சென்றிருந்தீர்கள். அங்கு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவமும், அதன் பின்னர் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க முடியுமா?
கடந்த 2012-ம் ஆண்டு சக உறுப்பினர் ஒருவருடன் இலங்கையின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. இந்த பயணத்தால் மூன்று முக்கியமான முடிவுக்கு வந்தோம்,
1. 2012-ம் ஆண்டிலும் இலங்கையின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தின் பிரசன்னம் கடுமையாக இருந்தது. முக்கியமாக வடக்கு பகுதிகளில் அதிகமாகவே காணப்பட்டது.
2. இலங்கை தமிழர்களுக்கும் மத்திய அரசுக்குமான சமரச முயற்சிகள் எதுவும் துவங்கவோ நடைபெறவோ இல்லை.
3. காணாமல் போனவர்கள் குறித்த கேள்விகளுக்கு உறுதியான எந்த பதிலும் அவர்களால் தர முடியவில்லை. மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த மோதலில் உயிரிழந்திருந்தும் அது குறித்து பொறுப்பேற்கவோ எவரும் முன்வரவில்லை. தொடர்ந்து
இலங்கை பிரச்சனை குறித்து கனடா அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். மனித உரிமைகள் ஆணையத்தால் அழுத்தமான தீர்மானத்தை கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டோம்.
இலங்கையில் சுதந்திரமான விசாரணையை மெற்கொள்ள அனைத்து விதமான ஆதரவும் கனடா தொடர்ந்து அளிக்கும். மேலும் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை வழங்கவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.
4. கன்செர்வேடிவ் அரசை மீண்டும் தெரிவு செய்வதால், குறிப்பாக தமிழர்களின் எதிகாலம் கருத்தில் கொண்டு, இலங்கை பிரச்சனையை எப்படி எதிர்கொள்ளும்?
சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணை மட்டுமே இலங்கை பிரச்சனைக்கு உரிய தீர்வினை தரமுடியும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய பதிலை தரவேண்டும். இந்த பிரச்சனையின் உண்மைத்தன்மையை அறிந்தால் மட்டுமே இந்த கொடிய நிகழ்வை மறக்க முடியும்.
5. கனடா மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கனடியர்கள் புதிதாய் தெரிவு செய்யவிருக்கும் கன்செர்வேடிவ் அரசு எப்படி உதவிகரமாக இருக்கும்?
வெற்றிகரமான பொருளாதாரம் வளர்ந்து வரும் தமிழ் சமூகத்திற்கு அதிக வாய்ப்பினை வழங்கும். இலங்கையின் மறுசீரமைப்புக்காக கனடா அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். கனடா மற்றும் இலங்கையின் வியாபார தொடர்புகளை பல மடங்காக மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #SrilankanTamils #IndependentInternationalEnquiry

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...