Wednesday, October 21, 2015

அந்நியநாடுகளின் வலையில் இந்திய கடல்ப்பகுதிகளா? - Indian Ocean



அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும், இந்துமகா சமுத்திரத்தை ஒட்டிய பகுதிகளிலும் அமெரிக்க-இந்திய-மலபார் பகுதிகளில் இராணுவ கடற்பயிற்சிகள் இன்றுவரை (21-10-2015) நடைபெற்று வந்தன. ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் இந்தப் பயிற்சிகளில் இந்தியாவோடு தொடர்பு கொண்டிருந்தன.

சீனாவும் இந்துமகா சமுத்திரம் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி, தங்கள் வியாபாரத்தைப் பெறுக்க கடல்மார்க்கமாக சில்க் வேக்கள் அமைத்து வருகின்றது. தரைவழியாகவும் பல்ஜிஸ்தான் வழியாக பாகிஸ்தான் - இந்தியாவின் குஜராத் எல்கை வரை சீனா தன்னுடைய சில்க் வழிகளை அமைத்து வருகின்றது.

அமெரிக்காவைு இந்தியாவின் தெற்கே உள்ள முக்கடலில் அனுமதித்துவிட்டோம். ஏற்கனவே சீனா ராஜபக்‌ஷேவின் உதவியால் இந்துமகா சமுத்திரத்தில் காலூன்றிவிட்டது. இதற்கு மத்தியில் எரிவாயுக்குழாய்களை சீனா இந்துமகா சமுத்திரம், வங்கக்கடல் வழியாக பர்மாவரைக்கும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இப்படியெல்லாம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிற வகையில் நிலைமைகள் கைமீறிக் கொண்டிருக்கின்றன. நமது கடற்பகுதிகளில் அந்நியர்கள் சிறிது சிறிதாக நுழைந்து கால் ஊன்றினால் எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுமல்லவா? இதையெல்லாம் ஏன் இந்திய அரசு உணர மறுக்கின்றது?

ஈழப்பிரச்சனையில் எப்படி இந்திய அரசு தவறு செய்கின்றதோ, அதேபோல தெற்கே உள்ள இந்துமகா சமுத்திரம் கிழக்கே வங்கக்கடல், மேற்கே அரபிக்கடல் பகுதிகளில் அந்நிய நாடுகள் நுழைவைதைத் தடுக்க தவறுவது ஏனோ?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-10-2015



#IndianOcean #KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...