Thursday, October 15, 2015

தமிழக அரசியல் வரலாற்று பதிவு - TamilNadu Politics

இன்றைய தமிழ் இந்துவில் நண்பர் ஆர்.முத்துகுமார் 'கட்சிகள் உடைந்த கதை ' என்ற பத்தியில் காமராஜர் முதல்வராக இருந்தபொழுது சட்டநாத கரையாளர் , வெங்கடகிருஷ்ண ரெட்டியார்  ஆகியோர் 1957 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் சீர்திருத்த கமிட்டி துவக்கினார் என்று எழுதியுள்ளார் . ஆனால் அன்றைக்கு நடந்தது என்ன என்று ,  எனது 'நிமிரவைக்கும் நெல்லை' என்ற நூலில் இது குறித்து எழுதியுள்ளேன்




.

சீர்திருத்த காங்கிரஸ் கமிட்டி என்று அந்த கட்சியை அருப்புகோட்டை ஜெயராம ரெட்டியார் முன்னெடுத்து துவக்கினார். அவருக்கு ஆதரவாக கோவை. வீ கே. பழனிசாமி கவுண்டர் , கே.டி கோசல்ராம் , செங்கல்பட்டு ராமசாமி, டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி என்னும் தமிழ்நாட்டில் பலர் இந்த சீர்திருத்த காங்கிரசை அமைத்து அரசியலில் கச்சைகட்ட ஆரம்பித்தனர்.  அரசியலில் இந்த எதிர்வினை காமராஜருக்கு எதிராக எப்படி ஏற்பட்டது என்றால், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை சென்னை ராஜதானி பிரதமராக (அப்பொழுது முதல்வரை பிரதமர் என்று அழைப்பது உண்டு ) இருந்தவரை காமராஜர் பதவி விலக சொல்கிறார் என்ற பிரச்சாரம் அப்போது நடந்தது. இந்த மனதாங்களால்  பெருந்தலைவர் காமராஜருக்கு எதிராக, காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்குழுக்கள் தோன்றின. அந்த சம்பவத்தில் ஏற்பட்ட  துவக்கம்தான் இந்த சீர்திருத்த காங்கிரஸ்.

சாத்தூர் எஸ்.ஆர் .நாயுடு , சி.சுப்பிரமணியத்திற்கு நெருங்கிய நண்பர், அவரும் ஜெயராம் ரெட்டியாருக்கு ஆதரவாக இருந்தார் என்ற செய்திகளும் அப்போது இருந்தன. இப்படியான நிலையில்தான் ஜெயராம ரெட்டியாரால் சீர்திருத்த அமைப்பு நிறுவப்பட்டு தமிழகம் முழுவதும் 1957 தேர்தலில் போட்டியும் இட்டனர். அறியபடாத இந்த அரசியல் செய்திகளை எல்லாம் விரிவாக எழுத காலம் இடம்கொடுத்தால், அந்த பணியை செய்யலாம் என்று உள்ளேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #tamilnadu_Politics   #சீர்திருத்தகாங்கிரஸ்

1 comment:

  1. நன்றி! மிகவும் அருமையான பதிவு, சிங்காநல்லூர் தொகுதி சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

    Singai g ramachandran
    Singanallur Constituency
    Singanallur
    Singanallur MLA
    voter id verification in singanallur

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...