Saturday, October 17, 2015

பாஞ்சால குறிச்சி வீர சரிதம் - History of Panchalakurichi

பாஞ்சால குறிச்சி வீர சரிதம் - History of Panchalakurichi
__________________________________________________

கிட்டத்தட்ட 5  ஆண்டுகள் உழைப்பில் பண்டிதமணி , ஜெகவீரபாண்டியனார் எழுதிய பாஞ்சாலகுறிச்சி வீர சரிதம்  (இரண்டு பகுதிகள்) இன்றைக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் 216 வது நினைவுநாளில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் அச்சு பதிப்பு பணிகளால் தாமதமாகிவிட்டது.

அடியேன் பதிப்பாசிரியராக கொண்டு உயிர்மை பதிப்பகம் செம்பதிப்பாக வெளியிடுகிறது.



50 ஆண்டுகளுக்கு முன்னாள் வெளியிடபட்ட இந்நூல் அரசுடமை ஆக்கப்பட்டது .  இந்த நூல் தொகுப்புகள் கிழிந்து ,தாள்கள் கூட உடைந்து விடுகின்ற நிலையில் கவனமாக படியெடுத்து பதிபித்துள்ளோம் . இந்த நூலை பலரும் கிடைக்காமல் மறுபதிப்பு வருகிறதா என்று எதிர்பார்த்தனர்.   கட்டபொம்மனின் பராக்கிமத்தை அதிகாரபூர்வமாக சொல்கின்ற நூலாக விரைவில் வெளிவர இருகின்றது.

இந்த நூலின் மூல பிரதிகளுக்காக அலைந்து திரிந்து இறுதியாக தமிழக சட்டபேரவையின் முன்னாள் துணைத்தலைவர் மறைந்த விருதுநகர் அண்ணன்.பெ.சீனிவாசன் அவர்களிடமிருந்து சண்டை போட்டு பிடுங்கிக்கொண்டு வந்தது வேறு கதை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Kattabomman #Historyofpanchalakurichi

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...