Monday, October 19, 2015

விவசாயிகள் பொறுமையாக இருக்கின்றார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்.



நேற்று (18-10-2015) வாழை விவசாயம் பற்றிய பதிவுக்கு இரண்டு பின்னூட்டங்களைப் பார்த்தவுடன் வேதனையாக இருந்தது. வாழை விவசாயி என்ற நிலையில் பிரச்சனைகளைத் தெரியாமல் இப்படி சொல்லியுள்ளார்களே என்ற வேதனை ஒருபக்கம் இருந்தாலும், பிள்ளையைப் பெறுவது தாய்தான். தாய்க்குத்தான் பிள்ளை முழுச்சொந்தம்.

ஒரு வாழையினைப் பயிரிட்டு, அதை சிரமங்களுக்கிடையில் பராமரித்து சாகுபடி செய்யும் விவசாயிகளைவிட இடைத்தரகர்களுக்கு அதிகமான இலாபம் கிடைப்பது எப்படி ஏற்புடையதாகும்?

விவசாயிகளுடைய சிரமங்களையெல்லாம் சிந்திக்காமல் நகரத்தில் இருந்துகொண்டு பேசுவது ஏற்புடையதல்ல. இன்னும் சற்று வேகமாகச் சொல்வதென்றால் இவர்களுடைய பின்னூட்டம் சற்று கோபத்தையும் தூண்டுகிறது. பிரச்சனைகள ஆழ அறிந்து பின்னூட்டம் இடுங்கள்.

விவசாயிகள் பொறுமையாக இருக்கின்றான் என்று எண்ணிவிடாதீர்கள்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-10-2015
#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts‬ ‪#Plantaintree

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...