Monday, October 19, 2015

ஜம்மு-காஷ்மீர் -370 | Jammu Kashmir 370






இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. 1949-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்தலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.

சட்டப் பிரிவு 370-இன் கீழ் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளாக
இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.

இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் சொத்துக்களை வாங்கலாம்.

இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது. இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ மத்திய அரசால் முடியாது.

இதற்கான விடையை நேருவின் நம்பிக்கைக்கு உரிய சகாவான தஞ்சையைச் சேர்ந்த கோபாலசாமி ஐயங்கார் தெரிவித்தார்.  கோபாலசாமி ஐயங்கார் முதல் மத்திய அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகித்தவர் . ஜம்மு - காஷ்மீர் சமஸ்தான மகாராஜா ஹரி சிங்கின் திவானாகவும் இருந்தவர், அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ வகுத்ததில் இவருடைய பணி கணிசமானது.

“பல்வேறு காரணங்களால், மற்ற சுதேச சமஸ்தானங்களைப் போல காஷ்மீர் பகுதி இந்திய அரசுடன் சேருவதற்கான சூழல் அப்போது இல்லை. ஜம்மு - காஷ்மீர் பகுதிக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்கு  தேவையில்லாத பிரச்சனைகளைக் கிளப்பியது.
அம்மாநிலத்தின்  ஒருபகுதி எதிரிகள் வசமானது . ஐ.நா. சபையில் முறையிட்டதால் சர்வதேசக் கவனத்துக்கும் இது கொண்டுசெல்லப்பட்டு, புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது.

 காஷ்மீர் பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர்வு ஏற்பட்டால்தான் இது தீரும். மக்களுடைய விருப்பமானது, காஷ்மீர் மாநில அரசியல் சட்டப்பேரவை மூலம் - மாநிலத்துக்கான சட்டங்களையும் மத்திய அரசுக்கு இந்த மாநிலம் மீதுள்ள அதிகாரங்களையும் - தீர்மானிக்கும்” என்றார் கோபாலசாமி.

சுருக்கமாகச் சொன்னால், நாட்டின் பிற பகுதிகளைப் போல ஜம்மு - காஷ்மீர் மாநிலமும் ஒரு நாள் முழுமையாக இணைந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் இந்த அரசியல் சட்டப்பிரிவிலேயே , ‘இடைக்கால அடிப்படையில்’ என்று குறிப்பிட்டார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவும்போதும், மக்கள் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கும்போதும்தான் இது நடைபெறும்.

ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக அப்போதைய உள்த்துறை அமைச்சர் படேலின் உண்மையான அணுகுமுறை தவறாகத் திரிக்கப்பட்டது. காஷ்மீரைப் பொருத்தவரை நேருவுக்கு தன்னுடைய சொந்த மாநிலம் மீது அபிமானம் இருந்தது. ஆனால் படேல் காஷ்மீர் பிரச்சினையை யதார்த்த நிலையில் நின்று பார்த்தார். காஷ்மீரத் தலைவர்களுக்குள் சுயநல எண்ணங்களும் பிரிவினை நோக்கங்களும் இருந்தன. அப்போது படேல் அதையெல்லாம் அங்கீகரிக்கும் நிலையில் இல்லை.

1949 அக்டோபரில் ஷேக் அப்துல்லாவுக்கும் கோபாலசாமி ஐயங்காருக்கும்  இடையில் 370-வது பிரிவின் பிரச்சனைகள் தொடர்பாகடும் கருத்துவேறுபாடுகள் தோன்றிவிட்டன.  துவக்க காலத்தில் 370வது பிரிவு 306ஏ என்றுதான் அழைக்கப்பட்டது.

அச்சமயத்தில் நேரு அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தச் சென்றிருந்தார். “எங்கே சுதந்திரத்துக்குத் தீங்கு நேருகிறதோ, நீதி மிரட்டப்படுகிறதோ, ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அங்கு நாங்கள் நடுநிலையோடு இருக்க முடியாது, இருக்கவும் மாட்டோம்” என்று அங்கு பேசினார்.

இதற்கிடையில் கோபாலசாமி ஐயங்கார், ஷேக் அப்துல்லா இருவருக்குமிடையே சச்சரவுகளும் தோன்றின. அரசியல் சட்ட நிர்ணய சபையிலிருந்து  விலகிவிடுவதாக கோபால்சாமி கூறினார்.

நேரு வெளிநாட்டுப் பயணத்திலிருந்தபோது, ஷேக் அப்துல்லா ஏற்படுத்திய பிரச்சினைகளிலிருந்து மீள படேலுடைய உதவியையும், ஆலோசனையையும் நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.  அப்துல்லாவுடைய பிடிவாதப் போக்கை படேல் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

“தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம், தன்னுடைய மாநில மக்களுக்குத் தான் ஆற்ற வேண்டிய கடமைகள் இவை என்று ஷேக் அப்துல்லா கூறுகிறார்” என்று கோபாலசாமி ஐயங்காருக்கு கடிதம் எழுதினார் படேல்.

இறுதியாக படேல்தான் தலையிட்டு, ஷேக் கோரிய திருத்தங்கள் சேர்க்கப்படாமல் காங்கிரஸ் கட்சி மூலமும் அரசியல் சட்ட நிர்ணய சபை மூலமும் இந்திய அரசியல் சட்டத்தின் அங்கமாக பிரிவு 370 இடம்பெற வழிவகுத்தார். இதுதான் பிரிவு370 அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டதற்கான காரண காரியங்கள் ஆகும்.

காஷ்மீர் அரசர் ஹரிசிங்குக்கும், இந்திய அரசுக்கும் மற்றும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் பிரிவு370க்கு காரணமாக இருந்தது.  திபெத்துடனும் இதுகுறித்து விவாதங்கள் அப்போது நடந்தன.  370பற்றி விரிவாகச் சொல்லவேண்டுமென்றால் பல விசயங்கள் சொல்லவேண்டும் நுரானி இதுகுறித்து முழுமையான நூலையும் எழுதியுள்ளார்.

சமீபத்தில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவரும் பிரிவு 370ன் சிறப்பு அதிகாரங்களைத் திரும்பப் பெறவேண்டுமென்று ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் 370-வது பிரிவு தற்காலிகமாக சேர்க்கப்பட்டாலும் இப்போது அது நிரந்தரமானதாக கருதப்படும் நிலைக்கு மாறிவிட்டதாக தீர்ப்பளித்துள்ளது. இந்த பிரிவை நீக்கவோ அல்லது அதில் திருத்தம் செய்யவோ அனுமதிக்க முடியாது என்ற நீதிபதிகள் இந்திய அரசியலமைப்பு, நாடாளுமன்றம் 1957-ல் கலைக்கப்பட்டுவிட்டதால் அதில் நிறைவேற்றப்பட்ட இந்த சிறப்பு பிரிவை இப்போது நீக்க குடியரசு தலைவருக்கு கூட அதிகாரம் இல்லை என நீதிபதிகள் ஹஸ்னைன் மசூதி  மற்றும் ஜனக்ராஜ் கோத்வால்  ஆகியோர் தங்களது 60பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் இதே பிரச்சனைக்காக  2002ல் நீதிபதிகள் எம்.ஏ.அத்தார், ஏ.எம்.மாக்ரே, ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இது குறித்து தங்களது தீர்ப்பில், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ‘நிதிச் சொத்துக்கள் பாதுகாப்புமயம் மற்றும் மறுகட்டுமானமாக்கம் மற்றும் பாதுகாப்பு நலன் அமலாக்கச் சட்டம்’ ஜம்மு-காஷ்மீரில் அமல் படுத்த முடியாததாகும் என்று கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் மற்ற மாநிலங்களுக்கு வழங்க முடியாது என்றும், ஜம்மு-காஷ்மீருடைய அணுகுமுறை வித்யாசமானது என்றும் காஷ்மீர் அரசு தொடர்ந்து சொல்லி வருகின்றது. இவ்வளவு அதிகாரங்கள் இருந்தும், மேலும் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று பாருக் அப்துல்லா ஒரு குழுவை அமைத்து, இன்னும் என்னென்ன அதிகாரங்களை காஷ்மீருக்கு மத்திய அரசு வழங்கவேண்டுமென்று 1999ல் பெற்றார்.

இதுபற்றி 18-10-2010ல் ஏசியன் ஏஜ்-ல் வந்த Abhijit Bhattacharyya-வின் முழுமையான ஆங்கில பத்தி

On July 17, 2015, when the Jammu and Kashmir high court’s division bench, comprising Justices Muzaffar Hussain Attar and Ali Mohammad Magrey, declared that signing of the “Instrument of Accession” with India by Maharaja of J&K notwithstanding, “legally and constitutionally” the “sovereignty of J&K remained intact and un-tampered”, many felt the judgment un-unexciting. However, when another bench of the J&K high court comprising Justices Hasnain Masoodi and Janak Raj Kotwal, on October 12, 2015, ruled that Article 370 of the Constitution of India, “though titled as ‘temporary, transitional and special provisions’, it has assumed place of permanence in the Constitution” and that “it is beyond amendment, repeal or abrogation, in as much as Constituent Assembly of the state before its dissolution did not recommend its amendment or repeal”, one found it to be a tad more exploratory, interesting and thought provoking than the previous verdict of July 2015 on “sovereignty of J&K”.

However, since the present judgment, understandably, is likely to be interpreted differently by different political colours, interested parties and pressure groups, it would be in order to delve slightly deeply into the salient features of Article 370 here.

Although the Article has three parts, we need to emphasise on the first and third parts. The first part limits the “power of Parliament to make laws for the said state” (J&K). Two key words, “consultation” and “concurrence” of the “government of the state” (of J&K) are mandatory for the Government of India or the Indian state to make any law. And the President of India holds the power, as s/he “may by order specify”. Interestingly, an “explanation” clarifies that the applicable cut off date of Article 370 (1) is March 5, 1948; the Indian Constitution came into effect on January 26, 1950.



The language of part three Article 370 too restricts and curtails the constitutional power of federal government as it stipulates thus: “Notwithstanding anything in the foregoing provisions... the President may, by public notification, declare that this article shall cease to be operative or shall be operative only with such exceptions and modifications and from such date as he may specify”. That, indeed, prima facie, gives the President some enviable power. But only momentarily, as this line empowering the President gets drastically curtailed in/by the very next line of Article 370 (3) which says: “Provided, that the recommendation of the Constituent Assembly of the state” (of J&K) “referred to in clause (2) of Article 370 shall be necessary before the President issues such a notification”. In other words, even the President of India, vide Article 370 (3), cannot exercise his/her power in an unfettered manner, without the “recommendation of the Constituent Assembly of the state”. New Delhi and Srinagar/Jammu are necessary and complementary to each other. A classic case of inter-dependence which would be hard to disentangle from in the foreseeable future.

Thus, three crucial and critical words: “consultation”, “concurrence” and “recommendation” constitute the backbone of Article 370, which mandatorily involve and connect the “state, government and Constituent Assembly of J&K” at every step pertaining to all initiatives, actions or implementation of any law of, or by, the Indian state, government or Parliament.

Today, one does not wish to get into a debate on the J&K high court verdict as to whether Article 370 is “beyond amendment or abrogation” or not, or whether its “place of permanence in Constitution” would stand any future scrutiny of the law of the land or not. Suffice it to suggest that the history of evolution of every law and the system thereof has not been seen or found to be inflexible or rigid to eternity. “Evolution” by implication has always been flexible and harbinger of change.

A question can, however, be asked on the heading of Part XXI “temporary, transitional and special provisions” of the Constitution of India under which Article 370 falls. How “temporary, transitional and special” are the provisions of Part XXI of the Constitution? As long as there is no definite or precise answer or a prescription, description or definition, originating either from New Delhi or Srinagar/Jammu, Article 370 appears to have a self-propelled shelf life, politics or not.

Despite the larger-than-life existence and perceived omnipotence and omniscience of Article 370 and the doubt, debate, discussion following it, successive federal governments of India as well as the state administrations, headed by various shades of political parties of J&K, more than 200 Central acts today are applicable to J&K.

Beginning October 26, 1947, when “Maharajadhiraj Hari Singh Jammu Kashmir Naresh Tatha Tibet adi Deshadhipathi” signed the “Instrument of Accession” with India for only three subjects like defence, external affairs and communication, is it not a great leap forward? A great achievement by all account? After this, can, or should, anyone really question J&K being a part of India?

It is more heartening to note that the J&K high court by its verdict of October 12, 2015, on Article 370 has directly and openly acknowledged the supremacy and sovereignty of the Constitution of India. It virtually nullifies its earlier decision of July 17, 2015, which had claimed “sovereignty” of Srinagar/Jammu, accession of J&K to India in 1947 notwithstanding. 

In other words, if the J&K high court declares that J&K has sovereignty or is sovereign, then the very existence of Article 370 stands challenged as it implies its non-applicability on J&K. In juxtaposition, if Article 370 is conceded to (as has been done by the J&K high court vide its order October 12, 2015), as a permanent, or temporary, transitional and special provision, then there is no scope for any confusion on, and conflict between, the jurisdiction, authority and power of the Central and state governments. And that truly, prima facie, marks a landmark verdict of, and by, the J&K high court.

Clearly, therefore, with the unambiguous, focused and pointed reference to Article 370, the legal position of the sovereignty of India and, the connect between Srinagar/Jammu with New Delhi, stands vindicated — despite the prospect of turbulent politics and “issues” raised by sundry fringe elements. The bottom line, as of now, is that Article 370 unites India with J&K and vice-versa; present or possible future call for its alteration or abolition notwithstanding. Since hundreds of federal laws of India are already applicable in J&K, what is the hurry?
Courtesy : Asian Age

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-10-2015

#KsRadhakrishnan #KSR_Posts #Kashmir370 #JammuKashmir

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...