Sunday, October 18, 2015

தமிழினிக்கு இரங்கல்


தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த 43 வயதான தமிழினி என அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி  இன்று காலை புற்றுநொயினால் அவதியுற்று சிகிச்சைப்பலனின்றி காலமானார்.

கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலே 2013ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

1991ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்திலே இணைந்து பெண் இயக்கப்போராளியாகக் களப்பணி ஆற்றியவர். தமிழ் இலக்கியப் பணிகளிலும் ஆர்வம் மிக்கவர். அவரது படைப்புகள் தமிழ் ஏடுகளில் வெளிவந்துள்ளன. பன்முகத்தன்மை கொண்ட தமிழினி எல்லோருடைய அன்பையும், நட்பையும் பெற்றவர்.

பலநேரங்களில் கதைசொல்லியின் படைப்புகள் பற்றியும் என்னிடம் பேசியுள்ளார். என்னுடைய அரசியல் பணிகள் குறித்தும் பேசியதும் உண்டு. அவருடைய இழப்பு என்னுடைய நட்புப்பட்டியலில் ஒரு பாரிய இழப்பாகும்.

தமிழீழ வரலாற்றிலும், தமிழீழ இலக்கிய தளத்திலும் அவருடைய அடையாளங்களும், முத்திரைகளும் என்றைக்கும் பதிந்திருக்கும். அவர் இழப்பால் வாடும் அத்துணைபேர்களுக்கும் கதைசொல்லி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  சகோதரிக்கு வீரவணக்கம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-10-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #Tamilini

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...