Thursday, October 29, 2015

திருமதி சுபாஷினி! - Subashini Tirumalai

திருமதி சுபாஷினி! - Subashini Tirumalai
_______________________________________

        திருமதி சுபாஷினி இதழியலாளர்; இலக்கியவாதி; கவிஞர்; காந்தியவாதி; சமூக ஆர்வலர் எனப் பல அடையாளங்களைக் கொண்டவர். திருக்குறளை ஹைக்கூ வடிவில் படைத்தவர்.  இவருடைய தந்தையார் டி.டி.திருமலை அவர்கள் வினோபாவுடன் நெருங்கிப் பழகியவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்.  பூமிதான இயக்கத்தில் தமிழகத்தின் முக்கியப்புள்ளியாக இருந்தார்.

ரசிகமணி டி.கே.சியின் வட்டத் தொட்டியிலும் இணைந்து பணியாற்றினார். பேராசிரியர் அ.சீனிவாசராகவன் அவர்களுடைய மாணவர். ரசிகமணி டி.கே.சி , நீதிபதி மகாராஜன் ஆகியோரோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர். மதுரை காந்திய தத்துவப் பிரச்சாரராகவும் பணியாற்றி சென்னை தக்கர் பாபா வித்யாலயத்தில் முக்கியப் பொறுப்பிலும் இருந்தவர். இவரது தந்தையார் திருமலை அவர்களுக்குப் பூர்வீகம் திருவில்லிப்புத்தூர். 

கம்பராமாயணம், பாரதிபாடல்கள், தாகூர் படைப்புகள் போன்ற இலக்கியப் பணிகளோடு காந்தியப் பணிகளையும் மேற்கொண்டவர் திருமலை அவர்கள். அவருடைய புதல்விதான் 
சுபாஷினி அம்மையார். 

இவருடைய தந்தையார் டி.டி.திருமலை, பழ.நெடுமாறன் அவர்களைச் சந்திக்க வரும்பொழுது, நான் பலமுறை அவரைச் சந்தித்துப் பேசியதுண்டு.

திருமதி. சுபாஷினி தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு முக்கியமான புள்ளி. தி.க.சி அவர்களுடன் தந்தையார் என்ற உறவுமுறையில்  நெல்லைக்குச் சென்று அவரைச் சந்திப்பதுண்டு. தி.க.சியினால் இந்த அம்மையார் எனக்குப் பழக்கம். 

தி.க.சி குறித்து ,“தடம்பதித்த மாமனிதர்” என்ற நூலையும் எழுதியுள்ளார். அவர் அந்நூலுக்கு திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், திண்டுக்கல், கோவை, புதுவை மற்றும் சென்னையில் சிறப்பான நிகழ்ச்சிகள் மூலம் வெளியீட்டு விழாவும், அறிமுக விழாவும் நடந்தன.

தனது 55வயதில், இவரது எழுத்து வெளி உலகத்துக்கு வந்தது. இவரைக்குறித்து இன்றைய தினமணியில் நேர்காணல் வெளியானது மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ் உலகம் பாராட்டவேண்டிய ஒரு இலக்கியப் பெண்மணி. இன்னும் இவர் படைப்புகள் பற்றி அறிந்து தமிழ்கூறும் நல்லுலகத்தினால் இவர் கொண்டாடப்படவேண்டும். 


Subashini Tirumalai 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-10-2015

 #KsRadhakrishnan #KSR_Posts #SubashiniTirumalai

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...