Tuesday, October 27, 2015

கிளியோபாட்ரா மரணம்

கிளியோபாட்ரா மரணம்
__________________________________



எகிப்து நாட்டின் ராணியும், உலகத்தைக் கட்டிப்போட்ட கிளியோப்பாட்ரா பாம்புகடித்து அதன் நஞ்சினால் இறக்கவில்லை என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகம் சொல்லியுள்ளது.

பழங்கள் இருந்த கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப்பாம்பு கடித்து கிளியோபாட்ரா இறந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றும், அம்மாதிரி சம்பவங்கள் நடந்திருக்காது என்றும் ஆய்வாளர்கள் சொல்லியுள்ளனர்.

கிளியோபாட்ராவும், அவருடைய இரண்டு தோழிகளும் ஒரு சிறிய பழப்பெட்டிக்குள் இருந்த நாகம் கொத்தி இறந்திருக்க முடியாது. கிமு30ம் ஆண்டில் 39வயதில் இறந்த கிளியோபாட்ராவும் அவருடன் இறந்துபோன இரண்டு தோழிகளும் ஒரு பாம்பு தீண்டி மரணமடைய வாய்ப்பு இல்லை. அவ்வளவு வீரியமிக்க பாம்பு ஐந்துமுதல் ஆறு அடி நீளமிருக்கவேண்டும். அதை எப்படி ஒரு சிறிய பழப்பெட்டியில் மறைத்திருக்கமுடியும்? என்று அறிவியல் ரீதியான தர்க்கங்களோடு, நாகம் தீண்டி கிளியோபாட்ரா இறந்திருக்கமுடியாது என்ற சந்தேகங்களை மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-10-2015

#Cleopatra #KsRadhakrishnan #KSR_Posts

See also :

http://ksr1956blog.blogspot.in/2015/09/cleopatra.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/blog-post_5.html

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...