பொதுவாழ்வு தளத்தில் மதம், சாதி, வந்தேறிகள் என்று சமீபகாலமாக தேவையற்ற வகையில் பேசப்படுகின்றது. இந்தபோக்கு எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும். நல்லிணக்கம், மனிதநேயம் என்பதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு இம்மாதிரி செயல்பட்டால், மக்களாட்சியின் மாண்புகள் காணாமல் போய்விடும்.
அமைதியான இணக்கமான சூழல்கள் இல்லையென்றால், வேற்றுமையில் ஒற்றுமை, பன்மையில் ஒருமை என்ற தத்துவங்கள் அர்த்தமற்றுப் போய்விடும். இதை அனைவரும் உணரவேண்டும்.
ஒரு சாராரை வருத்தப்படுத்தும் வகையில் இவ்வாறு பேசுவதைத் தவிர்க்கவேண்டும். பரஸ்பர புரிதலும்; அணுகுமுறையும் இல்லாமல் இக்கட்டான சூழல்களுக்கு தள்ளிவிடக்கூடாது என்பதுதான் அனைவரும் கவனிக்கவேண்டிய பொறுப்பாகும்.
இதைக்குறித்து விரிவாகவும்; விளக்கமான பதிவையும் எழுத உள்ளேன்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-10-2015.
#KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment