Sunday, October 18, 2015

தமிழினி - நீங்காத மரணவலி!



காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை
இடைவிடாதுகொட்டிக் கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி
“சாகத்தானே போனதுகள்
சாகாமல் ஏன் வந்ததுகள்”
குறுக்குக் கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகி கனக்கிறது
போராடப் போன மனம்.

-தமிழினி
(02/05/2015)

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...