Sunday, October 25, 2015

ஐ.நா.மன்றம் -70 | UN -70










ஐ.நா.மன்றம் -70 | UN -70
_____________________________________ The UN officially came into existence on October 24th 1945. On 6th January 1946 it met for the first time, in London. The new organisation should endeavour to be a "peace-preserving organ of world society", ஐ.நா.மன்றம் துவங்கி இன்றோடு 70ஆண்டுகள் நிறைவாகின்றன. ஐநா சாதித்தது என்ன? சாதிக்காதது என்ன என்று விவாதிக்கப்படவேண்டிய தருணம் இது.
லீக் ஆஃப் நேஷன் என்ற அமைப்பு துவக்கப்பட்டு, அது கலைக்கப்பட்டபின் ஐ.நா.மன்றம் உருவாக்கப்பட்டது. ஐ.நா.விலும் ஊழலா என்று பேசப்பட்டது கவலைக்குரிய செய்தி. ஈழத்தமிழர் பிரச்சனையிலும், அதுகுறித்த அறிக்கையில் உள்ள பக்கங்கல் திட்டமிட்டு அகற்றப்பட்டது, என்ற குற்றச்சாட்டுக்களுக்கும் ஐ.நா.உட்பட்டது. வல்லமை மிக்க வீட்டோ நாடுகளின் கைவசத்தில்தான் ஐ.நா. இருக்கின்றது. உலகநாடுகளின் உரிமைகளை உண்மையாக துலாக்கோல் நிலையில் உரைக்கவில்லை என்ற பார்வையும் ஐக்கிய நாடுகள் சபை மீது உண்டு. ஐநா அல்லது யூஎன், என்றழைக்கப்படும், பல உறுப்புநாடுகளைக்கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. 1945அக்டோபர் 24ம் நாள் வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இது தொடங்கப்பட்டது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, ஐ.நாவின் முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை அவர்களால் செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உறுப்பினர் அந்தஸ்து உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதித் தீர்மானம் எடுக்கப்படும். செப்டெம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. சூலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் ஐ.நாவில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
ஐநாமன்றத்தின் நோக்கங்களான, 1. கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்; 2. பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். 3. மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல். 4. மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல். 5. இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே. 6. உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். 7. உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது. 70ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள ஐ.நா மன்றம் சாதித்ததும் உண்டு; அதேநேரத்தில் ஒருசில பிரச்சனைகளைத் தட்டிக்கழித்ததும் உண்டு. அது இயலாமையிலா வேறுகாரணங்களா என்று தெரியவில்லை. _____________________________________________________ The Charter of the United Nations was signed on 26 June 1945, in San Francisco, at the conclusion of the United Nations Conference on International Organization, and came into force on 24 October 1945. The Statute of the International Court of Justice is an integral part of the Charter. The UN Charter being signed by a delegation at a ceremony held at the Veterans’ War Memorial Building on 26 June 1945. Amendments to Articles 23, 27 and 61 of the Charter were adopted by the General Assembly on 17 December 1963 and came into force on 31 August 1965. A further amendment to Article 61 was adopted by the General Assembly on 20 December 1971, and came into force on 24 September 1973. An amendment to Article 109, adopted by the General Assembly on 20 December 1965, came into force on 12 June 1968. The amendment to Article 23 enlarges the membership of the Security Council from eleven to fifteen. The amended Article 27 provides that decisions of the Security Council on procedural matters shall be made by an affirmative vote of nine members (formerly seven) and on all other matters by an affirmative vote of nine members (formerly seven), including the concurring votes of the five permanent members of the Security Council. The amendment to Article 61, which entered into force on 31 August 1965, enlarged the membership of the Economic and Social Council from eighteen to twenty-seven. The subsequent amendment to that Article, which entered into force on 24 September 1973, further increased the membership of the Council from twenty-seven to fifty-four. The amendment to Article 109, which relates to the first paragraph of that Article, provides that a General Conference of Member States for the purpose of reviewing the Charter may be held at a date and place to be fixed by a two-thirds vote of the members of the General Assembly and by a vote of any nine members (formerly seven) of the Security Council. Paragraph 3 of Article 109, which deals with the consideration of a possible review conference during the tenth regular session of the General Assembly, has been retained in its original form in its reference to a "vote, of any seven members of the Security Council", the paragraph having been acted upon in 1955 by the General Assembly, at its tenth regular session, and by the Security Council. http://www.un.org/en/sections/un-charter/introductory-note/index.html Courtesy : UN -கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 25-10-2015 #UnitedNations #KsRadhakrishnan #KSR_Posts see also : http://ksr1956blog.blogspot.in/2015/10/blog-post_53.html http://www.dinamani.com/editorial_articles/article1177712.ece?service=print http://ksr1956blog.blogspot.in/2015/08/india-un-security-council.html http://ksr1956blog.blogspot.in/2015/08/in-u-turn-russia-supports-indias-entry.html http://ksr1956blog.blogspot.in/2015/09/sri-lanka-gets-un-report.html http://ksr1956blog.blogspot.in/2015/09/un-report-on-srilanka-tamils-issue.html http://ksr1956blog.blogspot.in/2015/10/srilankan-tamils-unhrc-report.html




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...