பெருநாட்டின் தலைநகர் லிமாவில் "ஆசிய மற்றும் பசிபிக் மண்டல நாடுகளுக்கான பொருளாதார வளர்ச்சி அறிக்கையை ஐஎம்எப் வெளியிட்டது .
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 விழுகாட்டிலிருந்து 7.3 விழுக்காடாக குறைந்துவிட்டது . எனவே பொருளாதார வளர்ச்சியை துரிதபடுத்த பொருளாதார சீர்திருத்தங்கள் (அதாவது , பொருளாதார சீர் குலைவு) மேலும் அதிகரிக்க படவேண்டும் . தற்போது சீர்திருத்தங்கள் மேற்கொள்ளபட்டாலும் அவை போதாது.இன்னும் தனியார் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கான "தடைகள்" பல துறைகளில் நீடிக்கின்றன. பல முக்கிய துறைகளிலுள்ள விதிகள் கொள்கைகள் தளர்த்தப்பட வேண்டும்.முக்கியமாக எரிசக்தி , சுரங்க தொழில் , மின் உற்பத்தி துறைகள் ,தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சரக்குகளை சந்தைபடுத்துவதற் கான சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் விதிகள் முற்றாக தளர்த்த வேண்டும்.
செல்வத்தை கொழிக்கும் எரிசக்தி மற்றும் சுரங்க தொழிலில்களை தனியாருக்கு லாபம் கொழிக்கும் வகையில் எந்த விதமான தடையின்றி வழங்கிட வேண்டும் என நிர்பந்தம் மட்டுமில்லாமல் கட்டளையும் ஐஎம்எப் பிறப்பித்துள்ளது .
இந்தியாவின் இறையாண்மை, இந்தியாவின் எல்லைகளை தாண்டி வேறு யாரோ கைகளுக்கு சென்றுவிட்டது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-10-2015
#KSR_Posts#KSRadhakrishnan #IMF_India
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-10-2015
#KSR_Posts#KSRadhakrishnan #IMF_India
No comments:
Post a Comment