Tuesday, October 20, 2015

உலகெங்கும் தமிழர் மாட்சிமை





 நார்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக ஈழத்தமிழ் சகோதரி ஹம்சாயினி குணரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நார்வே தொழிலாளர்கள் கட்சியின் ஓஸ்லோ மாநகரக் கிளையின் துணைத்தளைவராக பொறுப்பிலிருந்தார் அவர்.  27வயதான இச்சகோதரி ஓஸ்லோ நகரில் அனைவரின் அன்பையும் பெற்றவர். 2011ம் ஆண்டு நார்வே தொழிலாளர்கட்சியின் இளைஞர்கள் மாநாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்தப்பித்தவர் ஹம்சாயினி. அந்தத் தாக்குதலில் 72பேர்வரை கொல்லப்பட்டிருந்தார்கள். ஓஸ்லோவில் பொறுப்பிலிருந்துகொண்டு ஈழத்திற்கு  தனது பங்களிப்பைச் செய்துகொண்டிருப்பவர் சகோதரி ஹம்சாயினி குணரத்தினம். அவருக்கு வாழ்த்துகள்.

கனடா நாட்டின்  நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஈழத்தமிழரான  வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி  லிபரல் கட்சியின் சார்பில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கும் வாழ்த்துகள்.

ஏற்கனவே கனடாவில் சகோதரி ராதிகா சிற்பேசன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றிருந்தார். உலகெங்கும் சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தமிழர்களும் தேர்தல் களத்தில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பேற்பதை கடந்த பத்து ஆண்டுகளில் கவனித்து வருகின்றோம். இதில் குறிப்பாக ஈழத்தமிழர்களுடைய பங்களிப்பால் தமிழர்களுக்குப் பெருமை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட நியாயமான போர்குணத்தால் தமிழர்கள் யார் என்று அறியமுற்பட்டு உலகத்தையே திரும்பிப்பார்த்தது.  மூவேந்தர்கள் ஆண்ட காலத்தில் யவனம்,கிரேக்கம், கடாரம் என்று தொடர்புகளைக்கொண்டு தமிழர்களுடைய பெருமை கொடிகட்டி மாட்சிமையோடு பறந்தது.  இன்றைக்கு உலக அளவில் தேர்தல்களில் தமிழர்கள் மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறுவது நமக்குத்தானே பெருமை. 

தமிழீழம் மலர்ந்திருந்தால் முற்றிலும் நிலைமைகள் மாறி இருக்கும். 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-10-2015.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...