ஆப்ரிக்க உச்சிமாநாடு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தமிழாக்கம் எழுதவேண்டுமென்று சிலர் கேட்டிருந்தனர்.
ஒருகாலத்தில் இருண்டகண்டம், கறுப்பின மக்களின் பூர்வீக மண் என்று அழைக்கப்பட்துவது. இன்றைக்கு அந்த மண்ணில் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தாதுவளங்களைக் கொள்ளையடிக்கின்றனர். ஆரம்பக்கட்டத்தில் வெள்ளையர்களைக் கண்டு ஆப்பிரிக்க மக்கள் பீதியுடன் ஓடியதாகக் கதைகளும் உண்டு. அவர்களை விசித்திரமான விலங்குகள் என்று அங்குள்ள பூர்வீகக் குடிகள் கருதியதாக நாட்டுப்புறத் தரவுகளும் உண்டு.
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள 53நாடுகளில் 43நாடுகள் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதால், பசியும் பஞ்சமுமாக அங்குள்ள மக்கள் வாடுகின்றனர். பிறக்கின்ற லட்சக்கணக்கான குழந்தைகள் பசியால் வாடி மடிகின்ற அவலக்காட்சிகளும் உண்டு.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிரிட்டன் மக்களுக்கு எண்ணெயும், கொழுப்பு உணவுப்பொருட்களும் ஆப்பிரிக்காவிலிருந்துதான் எடுத்துச்செல்லப்பட்டது.
எண்ணெய் வித்தான நிலக்கடலை இங்கிருந்து வெள்ளையர்கள் கவர்ந்துசென்றது. தான்சானியா தட்பவெட்ப சூழ்நிலைக்கேற்ப நிலக்கடலை விளைவிக்கக்கூடிய பூமி. கோக்கோ பயிர் விளைச்சல்களையும் வெள்ளையர்கள் இன்றும் கொள்ளையடித்து வருகின்றார்கள். இப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் அயல்தேசத்தினர் கொள்ளையடித்தார்கள். இந்நாடுகளில் தாதுவளங்கள் நிரம்ப உள்ளன.
இப்போது ஆப்பிரிக்காவில் சில அமைப்புகள் தோன்று தங்கள் உரிமைகளையும் நியாயங்களையும் கேட்டுப்போராடுகின்றனர். 1972ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடந்த சுற்றுச்சூழல் உச்சிமாநாட்டில், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும். எங்கள் மண்ணில் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள் என்று உரிமைக்குரல் எழுப்பியுள்ளது முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால், அமெரிக்காவோ, ஐரோப்பாவோ இதுகுறித்து கவனத்திலே எடுத்துக்கொள்ளவில்லை.
ஆப்ரிக்க நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் பல்வேறுவகையான தாதுவளங்கள் கிடைக்கின்றன. இவற்றில் பல தாதுக்கள் உலக அளவில் ஆப்ரிக்க நாடுகளிலே அதிக அளவில் கிடைக்கின்றன.
மாங்கனீசு - தென் ஆப்பிரிக்கா (உலக அளவில் இரண்டாமிடம்), கானா.
தாமிரம் - ஜாம்பியா, காங்கோ.\
பிளாட்டினம் - தென் ஆப்பிரிக்கா ( உலக அளவில் 75%), ஜிம்பாவே.
வைரம் - காங்கோ, தென் ஆப்ரிக்கா, நமீபியா, கானா (உலக அளவில் 30%) .
தங்கம் - தென் ஆப்ரிக்கா (உலக அளவில் 5வது இடம்) , கானா, ஜிம்பாவே, தான்சானியா, மாலி .
பாக்ஸைட் - கானா, மொசாம்பியா, தென் ஆப்ரிக்கா, சீரா லியோன்.
யுரேனியம் - நைஜீரியா(உலக அளவில் 2வது இடம்), நமீபியா, தென் ஆப்ரிக்கா.
இப்படி இன்னும் அறியப்படாத தாதுவளங்கள் எவ்வளவு உள்ளனவோ. ஏனென்றால் இருண்டகண்டம் என்றழைக்கப்படும் ஆப்பிரிக்கா இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-10-2015
#KsRadhakrishnan #KSR_Posts #AfricaMinerals
No comments:
Post a Comment