Wednesday, October 14, 2015

உடுமலைப்பேட்டை சல்லிபட்டி , பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கர் - Ethalappa Naicker



ஆங்கிலேய ஆட்சியில், உடுமலைப்பேட்டை அருகே சல்லிபட்டி , பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கர் பிரிட்டிஷ்காரரை தூக்கிலிட்டு புதைத்த சமாதி உள்ளது. பிரிட்டிஷ்கார ஆட்சியில் கட்டபொம்மன் , மருது சகோதரர்கள் போன்ற மன்னர்களையும் மட்டுமல்லாமல், பல இந்தியர்களையும் தூக்கிலிட்டும் ,துப்பாக்கியாலும் சுட்டு கொன்றார்கள்.


பிரிட்டிஷ்காரர்கள் கொடி கட்டி இந்தியர்களை அடக்கியாண்ட காலத்தில் எத்தலப்ப நாயக்கர் ஆங்கிலேயரையே தூக்கிலிட்டு புதைத்து, வரலாற்றையே திகைக்கவைத்த செய்தியாகும். சில வருடங்களுக்கு முன்பு அந்த இடத்திற்கு சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கர் குறித்து முழுமையான வரலாற்று பதிவு செய்யவேண்டுமென்று நினைக்கின்றேன். அவரை குறித்து வரலாற்று தரவுகள் யாரிடமாவது இருந்தால் அனுப்ப வேண்டுகிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 14-10-2015 ‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Ethalappa Naicker

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...