தென்மாவட்டங்களில் அக்காலத்தில் மருத்துவமனையினை வைத்தியசாலை என்று சொல்வார்கள். அக்காலத்தில் வைத்தியத்தை வழங்கி சேவையாற்றுவதில் மதுரை ராஜாஜி மருத்துவமனை குறிப்பிடத்தக்க ஒன்று.
அப்போதைய ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் வரைக்கும் சிறப்பான மருத்துவ வசதிகளைத் தந்த மதுரை ராஜாஜி மருத்துவமனை நிறுவப்பட்டு 73 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் அடிப்படையில் இம்மருத்துவமனையின் சிகிச்சைகள் வழங்குவது என்பது 75ஆண்டுகளாகத் தொடர்கின்றன.
பத்மஸ்ரீ டாக்டர்.வெங்கடசாமி, டாக்டர். காமேஷ்வரன் எனப்பல மருத்துவ ஆளுமைகள் மக்கள்நலப் பணியாற்றிய இந்த மருத்துவமனையை சற்று பின்னோக்கி நினைத்துப் பார்க்கின்றோம். 1980காலகட்டங்களில் அரசியலில் கரைபடியாத கரங்களையுடைய முன்னாள் அமைச்சர் கக்கன் சாதாரண பிரஜையைப் போல வெறும் பாயில் படுத்து சிகிச்சை பெற்றது இந்த மருத்துவமனையில் தான். இதற்கு ஒரு வரலாறு உண்டு.
இன்றைக்கு எவ்வளவோ நவீன மருத்துவமனைகள் வந்துவிட்டன இருப்பினும் அக்காலத்தில் தென் ஜில்லாக்களின் அபயக்குரல்களுக்கெல்லாம் சிகிச்சை அளித்த பிரம்மாண்ட கல்கட்டிடம் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது. அதை வணங்குவோம்.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-10-2015.
No comments:
Post a Comment