Tuesday, October 27, 2015

கொடைக்கானலை பாழாக்கும் பாதரசக் கழிவுகள்





இயற்கை கொஞ்சும் கொடைக்கானல் மலையில் சுற்றுச்சூழல் முற்றிலும் மாசுபடும் நிலையில் பாதரசக் கழிவுகள் வெளியேறுகின்றன. யுனிலிவர் நிறுவனத்தின் மூலமாக வெளியேற்றப்பட்ட பாதரசக் கழிவுகளை அகற்றி, சுத்தப்படுத்தும் பணியே நடைபெறவில்லை.

இந்நிறுவனம் 14ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் மண்ணில் கலந்த பாதரசக் கழிவுகள் ஒருகிலோ எடையுள்ள மண்ணில் 20முதல் 25கிராம் வரை உள்ளது. 0.1விழுக்காடு அளவு பாதரசம் கலந்திருந்தாலே அந்த மண் நஞ்சாகிவிடும். இதனால் மண்வளம் பாதிப்பது மட்டுமில்லாமல், குடிநீர், விவசாயம் , இயற்கைவளம், மக்களின் நல்வாழ்வும் முற்றிலும் பாதிக்கப்படும்.

இந்தப் பாதரசக் கழிவுகளால் குடிநீர் மாசடைந்து, அந்த நீரை அருந்தும்போது சிறுநீரகம் செயல் இழக்கும். காற்றும் மாசுபடும். இப்படி சுற்றுச்சூழலையும், மக்களையும் பாதிக்கும் கொடுமையை போக்கி கொடைக்கானலுடைய இயற்கையை மீட்க நடவடிக்கை எடுக்காமல் மத்திய மாநில அரசுகள் மெத்தனமாகவும், பாராமுகமாகவும் இருப்பது கண்டனத்துக்குரியது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-10-2015.

#UNILEVER #Kodaikanal #KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...